களமிறங்கிய பிடிஆர்.. தமிழ்நாடு முழுக்க உள்ள பள்ளி மாணவர்களுக்கு அசத்தலான செய்தி.. அப்படி போடு
சென்னை: இலவச மடிக்கணினி திட்டத்திற்காக கணினி வகை மற்றும் செயல்திறன்களை இறுதி செய்ய தமிழ்நாடு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திட்டத்தை அறிவித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இதற்காக களமிறக்கப்பட்டு உள்ளனர்.
கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்நாட்டின் இலவச மடிக்கணினி திட்டத்திற்கான மடிக்கணினி செயல்திறன் மற்றும் வகையை வரையறுக்க அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி-மெட்ராஸ், என்ஐசி, டிஎன்இஜிஏ மற்றும் எல்காட் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்ப தரநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு இதுவரை ஏழு கூட்டங்களை நடத்தி, செயல்திறன், சேமிப்பு, மென்பொருள், பேட்டரி மற்றும் வன்பொருள் தரநிலைகள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப specificationகளை இறுதி செய்துள்ளது. வழங்கப்பட உள்ள கணினிகளுக்கான பொருத்தமான பண்புகளை அடையாளம் காண புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
2025-26 மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. பட்ஜெட் அறிவிப்பின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக டெண்டர் மதிப்பீட்டுக் குழுவும் ஏல ஆவணங்களைத் தயாரித்துள்ளது, ஏலங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் கொள்முதல் தொடங்கும். மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கணினிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மடிக்கணினி விநியோகத் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட உள்ளது.
திட்டத்திற்கு காரணம் என்ன?
இந்த திட்டத்தை அறிவிக்க பல காரணங்கள் உள்ளன.
1. தமிழ்நாடு அரசு ஏஐ தொடர்பான பாடத்திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இதை படிக்க லேப்டாப் அவசியம்.
2. தமிழக மாணவர்களை உலக தரத்திற்கு கொண்டு செல்ல ஏற்கனவே நான் முதல்வன் திட்டம் அமலில் உள்ளது. இது போன்ற திட்டங்களில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட லேப்டாப் அவசியம்.
3. தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பல நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் பின்தங்காமல் இருக்க லேப்டாப் அவசியம்.
4. அதோடு மிக முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான வசதிகள், வாய்ப்புகள் தேவை. அதற்கு லேப்டாப் அவசியம்.
5. அரசு லேப்டாப் தர வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கையாக வைத்தனர்.
6. அதிமுக காலத்தில் திட்டம் நின்று போனாலும் திமுக தரவில்லை என்ற பிம்பம் இருந்தது. அது திமுக மீது குறையாக இருந்தது. இதை சரியாகி உள்ளது.
7. அதோடு டேட்டாபடி இந்த திட்டத்தை கொண்டு வந்ததால் ஏற்கனவே பல லட்சம் பேர் பலனடைந்து உள்ளனர். மீண்டும் கொண்டு வந்தால் அது பல லட்சம் பேருக்கு உதவும்.
8. நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் பல தமிழ்நாடு மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்களுக்கு லேப்டாப் இல்லாத காரணத்தால் சிரமப்படுகின்றனர். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப் பெரிய உதவியாக இருக்கும். இதையடுத்தே . மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கணினிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மடிக்கணினி விநியோகத் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications