"மத்திய அரசுக்கு எதிரான வேலை நிறுத்தம்! ஆதரவு தருகிறோம் ஆனால்.." அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கிய தகவல்
சென்னை: வரும் 28, 29ஆம் தேதி நடைபெறும் மத்திய அரசுக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக அகில இந்தியா தொழிற்சங்கங்கள் வரும் 28 மற்றும் 29ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாகத் தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
அதாவது அந்த இரு நாட்களில் பணிக்கு வராதவர்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதேபோல மின்வாரிய தொழிலாளர்களும் வேலைக்கு வரவில்லை என்றால் ஊதியம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகண்ணப்பன்
இந்நிலையில், இந்தப் போராட்டம் தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "முதல்வரின் உத்தரவின்படி தமிழக போக்குவரத்துத் துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து அந்தந்த போக்குவரத்து பணிமனைகளுக்கு நேரடியாக சில்லறை விற்பனையில் டீசல் வாங்குகிறது. இதனால் ஒரு மாதத்திற்கு மட்டும் தமிழக அரசுக்கு மூன்றரை கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. கடந்த ஆட்சியில் பெட்ரோல் நிலையங்களுக்குச் சென்று பேருந்துகளுக்கு பெட்ரோல் நிரப்புவதால் ஏற்பட்ட கூட்டநெரிசலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இலவச பயணம்
அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற உத்தரவைத் தொடர்ந்து பெண் பயணிகள் வருகை 40 சதவீதம் இருக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்தை தாண்டி 62 சதவீத பெண்கள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இத்திட்டத்திற்குப் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இதன் காரணமாகவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் அதிகளவு திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். இத்திட்டத்திற்குக் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் உடன் பிரச்சினை
பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் இடையே ஆங்காங்கே பிரச்சினை ஏற்படுகிறது. இதற்காகச் சிறப்பு அதிகாரிகளை நியமித்து பள்ளி மாணவர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்த மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புற பேருந்து சேவை
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 14 ஆயிரம் பேர் இந்துக்கள் மட்டுமே இயக்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் 18,177 பேருந்துகள் இயக்கப்படுகிறது., கடந்த ஆட்சியை விட நான்காயிரம் பேர் இந்துக்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. பொது மக்களின் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளுக்குத் தேவையான அளவிற்குப் பேருந்துகள் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களிலும் போதிய அளவில் பேருந்துகளை இயக்கி வருகிறோம்" என்றார்.

வேலை நிறுத்தம்
தொடர்ந்து வரும் 28, 29ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், "போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால்., பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியம் வராமல் போக்குவரத்துத்துறை பாதுகாக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
-
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
இலவச மின்சாரத்துக்கு சிக்கல்? ரூ.20 ஆயிரம் கோடி ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவது ஏன்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications