அடிதூள்! தமிழ்நாடு மொத்தத்திற்கும் குட்நியூஸ்.. சட்டசபையிலேயே அறிவித்த செந்தில் பாலாஜி! மாஸ் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுக்க சோலார் மாவட்டங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் இந்த மின் நிலையத்தை தொடங்கி வைத்தார்.

மின் நிலையம்

மின் நிலையம்

150 கோடி ரூபாயில் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் இந்த சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு சூரிய ஒளி மின்சாரத்திலும் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி, நேற்று (22/12/2022) 4141 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. தமிழ்நாடு இன்னும் சூரிய ஒளி மின்சாரத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இதற்கு நிறைய வேற்றுநிலப்பரப்பு தேவை என்பதால் தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்துவது இல்லை. ராஜஸ்தானில் நிறைய பாலைவன பகுதிகள், வெற்று நிலப்பகுதிகள் உள்ளதால் அங்கு 14,454 மெகா வாட் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் அமைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 5,690 மெகா வாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பேனல்கள் உள்ளன.

 மெகாவாட்

மெகாவாட்

தமிழ்நாட்டில் 5,690 மெகா வாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பேனல்கள் இருந்தாலும் இவை எப்போதும் 100% மின் உற்பத்தியை மேற்கொள்வது. இதில் நிறைய மின் இழப்புகள் இருக்கும். வானிலை காரணமாக மின் உற்பத்தி குறையும். இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டில் 4141 MW மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில் இதுதான் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க சோலார் மாவட்டங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

சட்டசபை

சட்டசபை

தமிழ்நாடு சட்டசபையில் இன்று கேள்வி எழுப்பிய திமுக ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க , ஜெயங்கொண்டம் மின்சார திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. ஆனால் மின்சார தேவை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதனால் பழுப்பு நிலக்கரி திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்போது இங்கே கொண்டு வரும். அதற்கான திட்டங்கள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இப்போதைக்கு அங்கே பழுப்பு நிலக்கரி திட்டம் கொண்டு வரப்படும் திட்டம் இல்லை. இதற்கான செயற்குறிப்பு தற்போது அரசிடம் இல்லை என்று கூறினார். இதையடுத்து கேள்வி கேட்ட எம்எல்ஏ கண்ணன், இந்த திட்டத்திற்காக 8 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

விவசாயிகள்

விவசாயிகள்

அந்த நிலத்தை ஒப்படைத்த விவசாயிகள் மீண்டும் நிலத்தை கேட்டு போராடி வருகின்றனர். நிலம் வாங்கப்பட்டு இன்னும் திட்டம் தொடங்கப்படவில்லை. 25 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக மக்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நிலங்கள் திரும்பி வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே மக்களிடம் வாங்கிய நிலத்தை மீண்டும் மக்களுக்கே கொடுத்த அரசு தமிழ்நாடு அரசுதான். இப்போது இந்த திட்டம் கைவிடப்பட்டுவிட்டதால், மின்சார தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் அதிக மின்சார தேவையை கவனத்தில் கொண்டு சோலார் மின்சார திட்டத்தை கொண்டு வர வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை

கோரிக்கை

இதையடுத்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சோலார் மின் திட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்படும். ஜெயங்கொண்டம் என்று இல்லை. தமிழ்நாடு முழுக்க சோலார் மின்சார திட்டம் கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களில் சோலார் மின்சார திட்டத்தை கொண்டு வர முடிவு செய்து இருக்கிறோம்.விரைவில் இந்த திட்டங்களை தொடங்குவோம். தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களும் சோலார் மாவட்டங்களாக மாற்றப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக இதற்காக பூங்கா அமைக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த பூங்காவை திறக்க உள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அனுமதிக்கு பின் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் பூங்காக்களை திறப்போம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+