சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல் சாகுபடி உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை! 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு மாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: நெல் சாகுபடி உற்பத்தியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    தமிழ்நாட்டில் குவியும் முதலீடுகள்... Investment Conclave மூலம் கிடைத்த பலன் *Tamilnadu

    அதில் 2021 -2022-ல் நெல் சாகுபடி பரப்பின் அளவு 22.05 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பான விவரம் வருமாறு;

    3 மேட்டர்.. 2 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான் 3 மேட்டர்.. 2 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான்

    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை

    கடந்த 2021ஆம் மே மாதம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நிலையில், அதற்கு பிறகு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு குறித்த தருணத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால் இந்தாண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்டாவில் சம்பா மற்றும் குறுவை சாகுபடி அமோக முறையில் நடைபெற்று வருகிறது.

    நெல் சாகுபடி பரப்பு

    நெல் சாகுபடி பரப்பு

    இதுமட்டுமல்லாமல் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் மூலம் இன்னும் பல சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது தமிழக அரசு. இந்நிலையில் நெல் சாகுபடி உற்பத்தியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகம் புதிய சாதனை படைத்துள்ள தகவலை வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ளது. அதில் 2021 -2022-ல் நெல் சாகுபடி பரப்பின் அளவு 22.05 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    நெல் உற்பத்தி

    நெல் உற்பத்தி

    இதே போல் நெல் உற்பத்தியை பொறுத்தவரை ஒரு கோடியே 22 லட்சத்து 22 ஆயிரத்து 464 மெட்ரிக் டன் என்ற அளவில் நெல் உற்பத்தி நடைபெற்றிருப்பதாக அரசுத் தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனிடையே 2001 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 2011-2012 ஆம் ஆண்டு தான் மிகவும் குறைந்த அளவில் நெல் உற்பத்தி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில் -விவசாயம்

    தொழில் -விவசாயம்

    தொழில்துறைக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதற்கு இணையாக வேளாண்மைத் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை தமிழக அரசு இதன் மூலம் சூசகமாக உணர்த்தியுள்ளது.

    English summary
    TN New Record in Paddy Cultivation and Production: நெல் சாகுபடி உற்பத்தியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் 2021 -2022-ல் நெல் சாகுபடி பரப்பின் அளவு 22.05 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X