என்னாது தமிழகம் டெல்லிக்கு Out of Control-ஆ? ஸ்டாலின் சார்! இந்தாங்க லிஸ்ட்! விஜய் விமர்சனம்
சேலம்: தமிழகம் எப்போதுமே டெல்லிக்கு Out of Control என முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் தமிழகம் எதில் அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்பது குறித்து தவெக தலைவர் விஜய் பட்டியலிட்டார்.
சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம், சீலநாயக்கன்பட்டி கேவிபி கார்டனில் நடந்தது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மக்கள் எள்ளி நகையாடும்போதும், கேலி செய்யும்போதும், குறைத்து மதிப்பிடும்போதும் ஏற்படும் உத்வேகமே மன உறுதியையும், சக்தியையும் அளிக்கும் என்று தவெக தலைவர் விஜய் பேசினார். "நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற உத்வேகம் அப்பொழுதுதான் பிறக்கும். நம்மைப் பற்றி கிண்டலும் கேலியுமாகப் பேசிய விஷயங்களையே நேர்மறையாக மாற்றும் சக்தி அங்கிருந்துதான் உருவாகிறது" என்று குறிப்பிட்டார்.
தன்னை விமர்சித்து, "விஜய் வீட்டை விட்டு வெளியே வா" என்று சவால் விடுப்பவர்களுக்குப் பதிலளித்த அவர், "அவர்களுக்கு என் வீடு எது, எங்கு இருக்கிறது என்று தெரியுமா? என்னைச் சீண்டிப் பார்ப்பதாக நினைத்து கேலியும் கிண்டலுமாகப் பேசுபவர்களுக்குக் கூறுகிறேன், தமிழ்நாடு உங்களுக்கு ஒரு மாநிலமாக இருக்கலாம், ஆனால் எனக்கு இதுதான் என் இல்லம்" என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.
மேலும், "என் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? எட்டு கோடிப் பேர். மொத்த தமிழ்நாடும் என் வீடு, தமிழக மக்கள் அனைவரும் என் குடும்பத்தினர். அவர்களின் முதல் படை வீரனாக நான் களமாடி, அந்தக் கோடிக்கணக்கான மக்களுக்கும் அனைத்துமாக நிற்பேன், அனைத்தையும் கொடுப்பேன்" என விஜய் உறுதியளித்தார்.
"இன்று நான் உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. மாறாக, உங்களுக்காக நீதி கேட்கவே இங்கு வந்துள்ளேன். இந்த விஜய் என்ன தவறு செய்தேன்? மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தது தவறா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அரசியல் பிரவேசத்திற்காக தனது பிற பணிகளை ஒதுக்கியது தவறா எனக் கேள்வி எழுப்பிய விஜய், பொதுக்கூட்டங்கள் நடத்த மற்ற அரசியல் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், தனது கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
"இதில் என்ன நியாயம்? நான் மக்களைச் சந்திக்கவும், மக்கள் என்னைச் சந்திக்கவும் விட மாட்டார்கள்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
மற்ற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்போது, தனக்கு மட்டும் 'ஸ்டாலின் சார் வழிகாட்டு நெறிமுறை'யே கடைப்பிடிக்கப்படுவதாக விஜய் மறைமுகமாக விமர்சித்தார்.
மேலும் விஜய் பேசுகையில், ஸ்டாலின் சார் ஒரு விஷயத்தை எப்போதும் சொல்வார். அதாவது தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்பார்.
ஆனால் நான் சொல்லவா, தமிழகம் சட்டம் ஒழுங்கில் ஸ்டாலின் சாரின் அவுட் ஆஃப் கன்ட்ரோல், பெண்கள் பாதுகாப்பு, வேலையின்மையிலும் அவருடைய அவுட் ஆஃப் கன்ட்ரோலில்தான் தமிழகம் உள்ளது.
திமுக ஆட்சியே அவுட் ஆஃப் கன்ட்ரோலில்தான் இருக்கிறது. சட்டசபையில் ஸ்டாலின் பேசிய போது, "மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதனால் நானும் மகிழ்ச்சி" என்றார்.
மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் விவசாயிகள், மீனவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என விமர்சித்திருந்தார்.
சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரப் பொதுக்கூட்டம், பல்வேறு கடுமையான நிபந்தனைகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் நடைபெற்றது. காலை முதலே விஜயைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். ஐந்தாயிரத்திற்கும் குறைவானோருக்கே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications