பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று ஆரம்பம்.. 3,302 மையங்களில் 7.94 லட்சம் பேருக்கு எக்ஸாம்.. நோட் பண்ணுங்க
சென்னை; தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. 3,302 மையங்களில் 7.94 லட்சம் போ் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுகின்றனர் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு முழுக்க உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

முறையான இடைவெளிவிட்டு அடுத்தடுத்த தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
* மார்ச் 5 ஆங்கிலம் தேர்வுகள் நடக்கும்.
* மார்ச் 8 கணினி அறிவியல் தேர்வுகள் நடக்கும் அல்லது உயிரி அறிவியல் தேர்வுகள் நடக்கும் அல்லது புள்ளியியல் தேர்வுகள் நடக்கும்.
* மார்ச் 11 வேதியியல் தேர்வுகள் நடக்கும் அல்லது கணக்குப் பதிவியல் தேர்வுகள் நடக்கும் அல்லது புவியியல் தேர்வுகள் நடக்கும்.
* மார்ச் 15ஆம் தேதி இயற்பியல் தேர்வுகள் நடக்கும் அல்லது பொருளாதாரம் தேர்வுகள் நடக்கும் அல்லது கணினி தொழில்நுட்பம் தேர்வுகள் நடக்கும்
* மார்ச் 19ஆம் தேதி கணிதம் தேர்வுகள் நடக்கும் அல்லது விலங்கியல் அல்லது தேர்வுகள் நடக்கும் விலங்கியல் தேர்வுகள் நடக்கும்
ஒவ்வொரு தேர்விற்கும் போதிய அவகாசம் அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிகம் சிரமப்பட வேண்டியது இல்லை. இந்த இடைவெளியை பயன்படுத்தி மாணவர்கள் முறையாக தேர்வுகளுக்கு தயாராக முடியும்.
தமிழ்நாடு முழுக்க 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பிளஸ் 2 மாணவர்களே பொதுத்தேர்வினை அச்சமின்றி பதற்றமின்றி ரிலாக்ஸ் ஆக எழுதுங்கள் ஆல் தி பெஸ்ட் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்தும் தெரிவித்து உள்ளார். பொதுவாக இது போன்ற தேர்வுகளுக்கு பறக்கும் படையினர் அமைக்கப்படுவது வழக்கம்.
அதேபோல் முறைகேடுகளை தடுக்க 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது போக வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 21,875 தனித்தோ்வா்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். ஒரு மூன்றாம் பாலினத்தவா் மற்றும் 125 சிறைக் கைதிகளும் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்தில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.
தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.
பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும், என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications