தமிழக காவல் துறையில் உள்ள.. 1,299 எஸ்ஐ பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு!
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1.78 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.
தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் மட்டும் உடல் உறுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

எத்தனை பேர் தேர்வு எழுதுகிறார்கள்?
தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வை எழுத, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. மொத்தம் ஒரு லட்சத்து 1,78,391 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 46 மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெறுகிறது.
சென்னையில் தேர்வு
சென்னையில் மட்டும் 9 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய அதிகாரிகள், அந்தந்த மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர். தேர்வில் முறைகேட்டை தடுக்க விண்ணப்பதாரர்களின் இடது கை கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. இதற்காக தேர்வாளர்கள் ஆன்லைனில் அப்ளை செய்யும் போதே, அவர்களுடைய இடது கை விரல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
தேர்வு நேரம்
காலை 10 மணியிலிருந்து மதியம் 12:30 மணி வரை முதன்மை தேர்வும், பிற்பகல் 3:30 மணியிலிருந்து 5:10 மணி வரையில் தமிழ் தகுதி தேர்வும் நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள், காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வரவேண்டும். தேர்வு கூடத்துக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், கடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம்












Click it and Unblock the Notifications