தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம்! ஜூன் 2 ஆம் தேதி கடை இயங்குமா?
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

அது போல் ராகியும், தேங்காய் எண்ணெய்யும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பரிசும், கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை வழங்கப்படும். இத்துடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டு வந்தது.
ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் எல்லாம் பல சரக்கு கடைகளை காட்டிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும். அதன்படி ரேஷன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் ரூ 25க்கும் துவரம் பருப்பு ரூ 30க்கும் சர்க்கரை ஒரு கிலோ 25 முதல் 35 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் உரிய நேரத்தை கடைப்பிடிப்பதில்லை என்றும் எப்போது போனாலும் ரேஷன் கடை பூட்டியே இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள். அந்த வகையில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இதனால் ரேஷன் கடைகளில் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளர்களுக்கு ஏற்கெனவே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு, ரேஷன் கடைக்காரர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
அது போல் மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் இதை கடைப்பிடிக்காவிட்டால் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டப் பொருள்களை உரிய காலத்துக்குள் வழங்கும் வகையில் இன்று ரேஷன் கடைகள் திறக்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைக்கான விடுமுறை வேறு ஒரு நாளில் வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது.
இதனால் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வேலைக்கு சென்றுவிட்டு வார ஓய்வில் இருக்கும் மக்கள் இன்று ரேஷன் கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். எனவே இது போல் அடுத்த வாரமும் ரேஷன் கடைகள் இயங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications