ஆளுநருக்கு எதிரான பேச்சு.. தீர்மான விவாதத்தை புறக்கணித்து சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சென்னை: ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பியனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக எம்எல்ஏக்கள் தொடர்ந்து பேசிய நிலையில் அவர்கள் வெளியேறினர்.
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார். இவருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போடுவதாகவும், திருப்பி அனுப்புவதாகவும் அரசு சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதாவது தமிழகத்தில் 2021ல் திமுக ஆட்சி அமைந்தது. அதன்பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்த சட்டசபை கூட்டத்தொடர்களில் பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கி வருகிறார்.
சில மசோதாக்களுக்கு உடனேயும், சில மசோதாக்களை கிடப்பில் போட்டும் அவர் ஒப்புதல் அளிக்கிறார். இருப்பினும் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த சூழலில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்என் ரவி அலட்சியமாக செயல்படுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.
இதற்கிடையே தான் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு கால நிர்ணயம் செய்யக்கோரி ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது சமீபத்தில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என கருத்து தெரிவித்தது. அதாவது மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கலாம் இல்லாவிட்டால் திருத்தம் செய்ய பரிந்துரை செய்யலாம். மாறாக கிடப்பில் போடுவது கவலையளிக்கிறது என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக இன்று சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. இன்று சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு சட்டசபை சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது.
இதற்கிடையே தான் இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன்பிறகு அதன் மீது விவாதம் என்பது நடந்தது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் அந்த தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இந்த வேளையில் திமுக கூட்டணியி்ல உள்ள கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து தனித்தீர்மானம் மற்றும் ஆளுநர் மீதான விமர்சனத்தை கண்டித்து நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் பாஜகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‛‛சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பாஜக பங்கேற்கும். திமுக கொண்டு வரும் தீர்மானத்தை பொறுத்து பாஜக வெளிநடப்பு செய்யும்'' என தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று பாஜகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
****
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications