மொத்தமாக மாற போகுது.. சென்னை சாலைகளில் இனி மாநகர தனியார் பேருந்துகள்? அரசு பரபர முடிவு
சென்னை: சென்னையில் தனியார் மாநகர பேருந்துகளை இயக்க அனுமதி கொடுக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் பேருந்துகளில் இருக்கும் குறைகளை சரி செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, 600 நகர பேருந்துகள், 800 மாநகர பேருந்துகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளனர். விரைவில் இந்த பேருந்துகள் தமிழ்நாட்டு சேவையில் களமிறக்கப்படும்.

இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் சேலம், மதுரை, கோவை, திருச்சியில்தான் களமிறக்கப்பட உள்ளன. இங்கே செல்லும் பேருந்துகள் நல்ல தரமுடன் இல்லை என்பதால் உடனடியாக அங்கே புதிய பேருந்துகளை களமிறக்க முடிவு செய்துள்ளனர். மொத்தமாக கோவைக்கு மட்டும் 160 பேருந்துகள் புதிதாக வழங்கப்பட உள்ளன.
அதேபோல் பழைய பேருந்துகளும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு உள்ளது. தற்போது சில்வர் - நீல நிறத்தில் இருக்கும் பேருந்துகள் வெள்ளை - மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன. இந்த புதிய பேருந்துகளின் படங்களை @tnstcbus வெளியிட்டு உள்ளது. வெள்ளை - மஞ்சள் கலந்த உருவத்தில் இந்த பேருந்துகள் உள்ளன.
தனியார் பேருந்துகள்: இந்த நிலையில்தான் சென்னையில் தனியார் மாநகர பேருந்துகளை இயக்க அனுமதி கொடுக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்போது சென்னைக்கு உள்ளே தனியார் மாநகர பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை.
இதற்கு பதிலாக குறிப்பிட்ட கட்டணத்துடன் தனியார் மாநகர பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் முதல்கட்டமாக இந்த வருடம் 500 பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அரசு சார்பாக 3000 பேருந்துகள் சென்னையில் மாநகர எல்லைக்குள் இயங்கும் நிலையில் தனியார் பேருந்துகள் இந்த வருடம் அனுமதிக்கப்பட உள்ளதாம்.
குறைபாடுகளை களைய முடிவு: இது பேருந்துகளில் உள்ள வசதி குறைபாடுகளை களைய ஆலோசனைகளை செய்து வருகின்றனர். நேரடியாக பேருந்து ஆர்வலர்கள், மக்களிடம் இருந்து தற்போது உள்ள மாண்புமிகு மேலாண் இயக்குனர் @tnstcbus குழு உள்ளிட்ட சமூக வலைதள வாயிலாக கருத்துகளை பெற முடிவு செய்துள்ளார்.

மேலும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் 200 புதிய படுக்கை மற்றும் இருக்கை வசதி பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சமீபத்தில் 450 டவுன் பஸ்களை வாங்குவதற்கு டெண்டர் எடுத்துள்ளது.பிரிவு வாரியாக ஒதுக்கப்பட்ட பேருந்துகளின் பட்டியல்
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விழுப்புரம்- 82
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம்- 112
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சேலம்-44
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோயம்புத்தூர்-52
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை-99
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி-61
மொத்தம்-450 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications