6 முக்கிய சேவைகள்.. அப்படியே மாறுது.. மின்சாரத்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு.. அலறும் இபி போர்ட்
சென்னை: தமிழ்நாடு முழுக்க மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே மின்சார முகாம்களை வரிசையாக நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக இன்று சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
சமீபத்தில்தான் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் சென்னை மின் பகிர்மானக் கட்டுப்பாட்டு மையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார்.

மழையால் ஏற்படும் மின் சேதாரங்களை விரைந்து சீரமைக்க 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு ரூ.4.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்விற்கு பின் குறிப்பிட்டார். மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும் ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும். புகார்களை 9498794987 என்கிற எண்ணில் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
முகாம்கள்: தமிழ்நாடு முழுக்க மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே மின்சார முகாம்களை வரிசையாக நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக இன்று சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
ஆன்லைனில் மாற்றங்களை செய்ய கஷ்டப்படும் நபர்கள் இதில் நேரடியாக மின்சாரத்துறை சார்ந்த சேவைகளை பெற முடியும். அதேபோல் ஆன்லைனில் விண்ணப்பங்களை செய்ய முடியாதவர்கள், நேரடியாக மின் அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இதில் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும்.
அதற்காகவே இன்று நடக்கும் சிறப்பு முகாமில் 6 சேவைகள் வழங்கப்படுகின்றன. புதிய மின் இணைப்பு வாங்குதல், மின் இணைப்பில் பெயர்களை மாற்றுதல், மின் இணைப்பை வேறு இடத்திற்கு மாற்றத்தால், மின் இணைப்பை துண்டித்தல், மின் கட்டண விகித மாற்றம், மின் இணைப்பின் பேசை மாற்றுதல் உள்ளிட்ட 6 சேவைகளை வழங்க உள்ளனர்.
இந்த 6 சேவைகளை உங்களுக்கு அருகிலேயே உள்ள முகாம்களில் செய்ய முடியும். சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முதல் கட்டமாக இந்த முகாம்கள் இன்று நடக்கின்றன. வரும் நாட்களில் இன்னும் சில முகாம்கள் வேறு வேறு மாவட்டங்களில் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
புதிய புகார் முறை: இதோடு இல்லாமல் தமிழ்நாட்டில் மின்சாரம் தொடர்பான புகார்களை இனி வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மழை காலத்தை முன்னிட்டு முதல் கட்டமாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, அந்த வகையில் சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 94440 99255 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 94458 50739 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 94983 78194 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56672 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் -91500 56673 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், செங் கல்பட்டு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56675 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், காஞ்சிபுரம் பகுதியில் வசிப்பவர்கள் 91500 56674 ஆகிய வாட்ஸ் அப் எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications