கோவை, மதுரை, திருச்சி, சென்னை.. தமிழ்நாட்டில் சாலை நெட்வொர்க்கே மாறுது! வரும் புது நெடுஞ்சாலைகள்!
சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள புதிய சாலைகள் தொடர்பாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த சாலைகள் தொடர்பான அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம்.
1. சென்னை ஈசிஆரில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.இங்கே நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும்,'' என, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் தெரிவித்தார். அதாவது சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு இரண்டு அடுக்கக் பலாம் அமைக்கப்படும். பட்ஜெட்டில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

2. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து ஊத்தண்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை மாநில நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இங்கே இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. முதல் பாலம் ஒரு வழி பாதையாக இருக்கும். அதற்கு மேலே உள்ள பாலம் எதிர் திசையில் ஒரு வழி பாதையாக செயல்படும்.
3. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய 4 வழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். சென்னை டூ திருச்சி இடையிலான புதிய 4 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதற்கான டிபிஆர் தயாரிப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளதாம். இது சென்னை திருச்சி இடையிலான பயணத்தை 5-6 மணி நேரத்தில் இருந்து 2.30-3 மணி நேரமாக குறைக்கும். அதிகபட்சம் 4 மணி நேரத்தில் சென்று விடலாம்.
4. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குடியில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம் வரை 4 வழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்
5. கோவை மேற்கு புறவழி சாலை, திருநெல்வேலி மேற்கு புறவழி சாலைகள் 1713 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.
6. மதுரையில் ரிங் ரோடு அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்
7. ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக பட்ஜெட்டில் வெளியான மற்ற அறிவிப்புகள்
சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும்.; இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும்.7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும். சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.
கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.
ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications