ஹப்பா.. வந்த விடிவுகாலம்.. நீண்ட காலத்திற்கு பின் புதிய பேருந்துகளை வாங்கும் தமிழ்நாடு.. அரசு அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் பல வருடங்களாக புதிய பேருந்துகள் வாங்காமல் பழைய பேருந்துகளை பயன்படுத்தி வந்த நிலையில் முதல்முறையாக புதிய பேருந்துகளை வாங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வணிக வாகன உற்பத்தியாளர் அசோக் லேலண்ட் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனத்திடம் (TN STU) 1,750 பேருந்துகளுக்கான ஆர்டரைப் பெற்றுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. சமீபத்தில் பல்வேறு மாநில போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆர்டர்களின் பின்னணியில் இந்த ஒப்பந்தமும் செய்யப்பட்டு உள்ளது என்று ஹிந்துஜா குழுமம் நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து இந்த ஆர்டரை உறுதிப்படுத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் இணைந்து சிறப்பான பேருந்துகளை வழங்க முடிவுசெய்துள்ளோம். தமிழ்நாட்டிற்கு பேருந்துகளை உறுதி செய்வதன் மூலம் இந்தியாவில் பேருந்துகளின் உற்பத்தியில் எங்கள் தலைமையை தக்க வைத்துக் கொள்ள உதவும்," என்று அசோக் லேலண்டின் சிஓஓ அனுஜ் கதுரியா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மஞ்சள் பேருந்து: சமீபத்தில் தமிழ்நாட்டில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. ஏற்கனவே அமலில் இருந்த பச்சை நிற எஸ்இடிசி பேருந்துகள் புனரமைக்கப்பட்டு மஞ்சள் நிற பேருந்துகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 14 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில்,பொதுமக்களின் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும், அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை 152.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய பேருந்துகள்: இந்த அறிவிப்பின்படி தற்போது தமிழ்நாட்டில் பல வருடங்களாக புதிய பேருந்துகள் வாங்காமல் பழைய பேருந்துகளை பயன்படுத்தி வந்த நிலையில் முதல்முறையாக புதிய பேருந்துகளை வாங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அசோக் லேலண்ட் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனத்திடம் (TN STU) 1,750 பேருந்துகளுக்கான ஆர்டரைப் பெற்றுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
நவம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை டெலிவரி காலத்துடன் 1666 டீசல் BSVI பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிறுவனம் அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் மேற்கொண்டு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications