2 தமிழக டாப் ஐபிஎஸ்களை தட்டி தூக்கிய மத்திய அரசு.. இனிதான் ஆட்டமே.. டெல்லி போகும் 2 மாஸ்டர்மைண்ட்
சென்னை: லோக்சபா 2024 தேர்தல் நடந்து கொண்டு இருக்கும் நிலையிலேயே எப்போதும் இல்லாத விதமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் மாற்ற தொடங்கி உள்ளது.
பொதுவாக லோக்சபா தேர்தல் நேரத்தில் இப்படி எல்லாம் அதிகாரிகள் மாற்றப்பட மாட்டார்கள். ஆனால் இப்போது தேர்தல் நடக்கும் நேரத்திலேயே மாநில அதிகாரத்தில் உள்ள சில அதிகாரிகள் மத்திய பணிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

அதன்படி 2 டிஐஜிகள் மத்திய அரசு பணிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மதுரை சரக டிஐஜியாக பணியாற்றி வரும் ரம்யாபாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். காஞ்சி சரக காவல்துறை டிஐஜியாக இருந்த பொன்னி மத்திய தொழிற்பாதுகாப்பு படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இன்னும் சிலர்; இது போக தமிழ்நாட்டை சேர்ந்த 2 டாப் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக இந்திய ஆட்சி பணிக்கு ஒருவர் தேர்வான பின் அவருக்கு இரண்டு இடங்களில் பொறுப்புகள் வழங்கப்படலாம். ஒன்று ஒன்றிய பொறுப்பு. அல்லது மாநில பொறுப்பு. ஒன்றிய பொறுப்பு ஒன்றால் மத்திய அரசின் பணியில் ஐஏஎஸ் அதிகாரி தேர்வு செய்யப்படலாம்.
அதே சமயம் சிலர் மாநில அரசு பணிக்கு பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்படலாம். உதாரணமாக செயலாளர், மாவட்ட ஆட்சியர், மற்ற துறை தலைவர் என்று பல பொறுப்புகளில் நியமிக்கப்படலாம். அதேபோல் ஒன்றிய பணிக்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிங்களும் மத்திய அரசின் பல பணிகளுக்கு தேர்வாக வாய்ப்புகள் உள்ளன.
மாநில அரசு பணி: இப்படி மாநில அரசு பணிக்கு தேர்வாகும் ஒருவரை மத்திய அரசு பணிக்கு அழைக்க முடியும். உள்துறை அமைச்சகம் இவரை அழைக்கும் பட்சத்தில் அதற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். சில சமயங்களில் அதிகாரிகளை மாற்றுவதில் குழப்பம் ஏற்படும்.
டெல்லி செல்லும் அதிகாரிகள்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டை சேர்ந்த 2 டாப் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் டாப் செயலாளர்களாக இருக்கும் 2 பேர் டெல்லி செல்ல அழைக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த உடன் அவர்கள் டெல்லி பணியில் இணைவார்கள். இதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை.
இரண்டு பேருமே தற்போது தமிழ்நாட்டில் மிக பெரிய செயலாளர் பதவிகளில் இருக்கின்றனர். முக்கியமான சில துறைகளே அவர்களுக்கு கீழ்தான் உள்ளது. தமிழக அரசு நம்பும் டாப் அதிகாரிகள் ஆவர் இவர்கள். முதல்வர் ஸ்டாலினின் டாப் சாய்ஸ் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு பேருமே தற்போது டெல்லிக்கு மத்திய பணிக்கு செல்ல இருக்கின்றனர். தமிழக அரசு இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சக முடிவை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை.
மத்தியில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஆட்சி மாற்றம் கூட ஏற்படலாம் என்று பேச்சுக்கள் வரும் நிலையில் 2 டாப் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி போவது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications