இனி உ.பி, கர்நாடகா எல்லாம் பக்கத்துலேயே வர முடியாது.. எட்ட முடியாத நம்பர் 1 இடத்தை பிடித்த தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
தேசிய இறக்குமதி-ஏற்றுமதி தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 4.78 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. மொத்தமாக வருடம் முழுக்க 7.8 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது.

இந்த எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 31% ஆகும். அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதி $16.48 பில்லியன் ஆகும். ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது.
தமிழ்நாட்டின் 7.8 பில்லியன் டாலர் ஏற்றுமதியானதுதான் இந்தியாவில் தனி ஒரு மாநிலம் மேற்கொண்ட அதிகபட்ச ஏற்றுமதி ஆகும். 3.56 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா செய்துள்ள போஸ்டில், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
கடந்த 2022 ஆண்டு நாங்கள் 5.37 பில்லியன் மதிப்பிலான ஏற்றுமதிகளைச் செய்து இந்தியாவில் நம்பர் 1 ஆனோம், 2023 ஆண்டு தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி ஜனவரி 2024 வரை $7.3 பில்லியனைத் தாண்டி ஏற்கனவே உயர்ந்துள்ளது, இது 32% சதவிகித ஏற்றுமதி ஆகும். இந்தியாவில் நாம்தான் நம்பர் 1. $9 பில்லியன் மைல்கல் இப்போது எட்டக்கூடியதாகத் தெரிகிறது. அதை நாம் சாதிப்போம்.
இந்த சாதனை தேசிய பொருளாதாரத்தில் மாநிலத்தின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, தென்னிந்திய மாநிலங்கள் கூட்டாக ஏற்றுமதியில் 50% பங்களிப்பை வழங்குகின்றன. தமிழ்நாடு உற்பத்திக்கான முக்கிய இடமாகவும், நமது இளைஞர்களுக்கு உயர்தர வேலைகளை உருவாக்கும் மையமாகவும் தொடர்ந்து பிரகாசிக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் தொடர் பணிகளே இதற்கு காரணம்.
நமது தொழில் பயணத்தில் புதிய சாதனைகளைப் படைப்போம். ஒன்றாக, நாம் முன்னேறுவது மட்டுமல்ல; நாங்கள் எதிர்காலத்திற்கான அளவுகோல்களை அமைக்கிறோம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். 3.26 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. 2.56 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் மகாராஷ்டிரா நான்காவது இடத்தில் உள்ளது. 2.13 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் குஜாத் நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications