தவெக உடன் கைகோர்க்கிறதா காங்கிரஸ்? தலைவர்கள் கொடுத்த சிக்னல்.. கேசி வேணுகோபால் சொன்னதை பாருங்க!
சென்னை: தவெக அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், "தமிழ்நாடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடம் விரைவில் எடுக்கும்" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தவெக 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 72 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 54 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி வாய்ப்பில் உள்ளது. தற்போது வரை ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை விஜய்யின் தவெக எட்டாத நிலையில், கூட்டணி மாறுதல்கள் ஏற்படுமா?எனும் கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வெளியேறி தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகித்துவரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேசுகையில், "தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் தவெகவை நோக்கித் திரும்பியுள்ளனர். அதனால்தான் தவெக இத்தகைய பிரம்மாண்டமான வாக்கு எண்ணிக்கையைப் பெற்று வருகிறது.
இது குறித்த அறிக்கையை, எங்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமைப்புப் பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோருக்கு அனுப்பியுள்ளேன். தமிழகத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் அனைவரும் இணைந்து முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், "விஜய்யின் வெற்றி நிச்சயமாக பாராட்டுக்குரியது. தமிழ்நாடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடம் விரைவில் எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் இந்தப் பேச்சுகள், அக்கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்க ரெடியாவதற்கான சிக்னல் தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். காங்கிரஸ் கட்சி, நீண்ட காலமாகவே ஆட்சியில் பங்கு என்ற குரலை எழுப்பி வரும் நிலையில், தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications