"ஆக்சன்" மாறுகிறது.. சென்னையை விடுங்க.. இனி இங்குதான் மழை விளாசும்.. வெளியான முக்கிய அப்டேட்!
சென்னை: சென்னையில் மழை குறைந்துள்ள நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து Chennai Rains (COMK) பக்கம் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
வட இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சூழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் தொடங்கியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னையில் மழை குறைந்துள்ள நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து Chennai Rains (COMK) பக்கம் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், சென்னையிலும், வட கடலோர தமிழ்நாட்டிலும் மழை வெளுத்து வாங்கிய நிலையில் தேவையான நிவாரணம் மழையில் இருந்து கிடைத்துள்ளது. நேற்று மாலையில் இருந்து மழை குறைந்துள்ளது. சில இடங்களில் மட்டும் இரவில் லேசான மழை பெய்து உள்ளது.

வானிலை
1ம் தேதி 7 மணி அளவில் 3 செமீ மழை பதிவாகி இருந்தது. அதுவே இரண்டாம் தேதி 7 செமீ என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது மழை அளவு சென்னையில் 1.8 மிமீ என்ற அளவிற்கு குறைந்து உள்ளது. சென்னையில் இதன் காரணமாக மொத்தமாக மழை நின்றுவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் கனமழை, மிக கனமழைக்கு பதிலாக சென்னையில் லேசான மழை பெய்யும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. சென்னையில் இப்படிப்பட்ட வானிலை மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

மழை இருக்குமா?
நேற்று இரவு சாட்டிலைட் புகைப்படங்களின் படி, புதுச்சேரி, நாகப்பட்டினம் இடையிலும் டெல்டா பகுதிகளிலும் கடுமையான மழை மேகங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. அதே சமயம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கையின் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அதுவும் வீக்காகி வருகிறது. இதனால் இன்று தெற்கு புதுச்சேரியில் கனமழை பெய்யும்.

நிலவரம் என்ன ?
அதேபோல் டெல்டாவில் சில பகுதிகள், தென் மாநிலத்தில் சில பகுதிகளிலில் இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்யும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் ஈரமான காற்று காரணமாக இங்கே மழை பெய்வதற்கு ஏற்ற வானிலை நிலவி வருகிறது. மேலே குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமின்றி, இந்த வானிலை சூழ்நிலை காரணமாக, மேற்கு உள் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

டெல்டா நிலை
ஆக்சன் தற்போது டெல்டா மற்றும் தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. சென்னையை பொறுத்தவரை இரவு நேரத்திலும், அதிகாலை நேரங்களிலும் லேசான மழை பெய்யும். லேசான மழை ஆங்காங்கே சில இடங்களில் பெய்யும். சில இடங்களில் சமயங்களில் கனமழை பெய்யலாம், என்று அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த 7-8 மணி நேரமாக எங்கும் மழை பெய்யவில்லை. இதையடுத்து பள்ளிகளும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications