"5ம் தேதி வரை விடாது".. வானிலை ஆய்வு மையம் முக்கிய வார்னிங்.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் வார்னிங் விடுத்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 6 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை விடாமல் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் இன்றும் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இன்று
இன்று தமிழ்நாட்டில் சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

நாளை
அதேபோல் தமிழ்நாட்டில் நாளை 20 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் நாளை லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை,, புதுக்கோட்டை மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

4 மற்றும் 5ம் தேதி
4ம் தேதி தமிழ்நாட்டில் 20 இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் தமிழ்நாட்டில் 4ம் தேதி மழை பெய்யும். சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், கடலூர், திருச்சி அரியலூர், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூரில் 5ம் தேதி கனமழை பெய்யும்.

சென்னை
சென்னையில் கடந்த 6 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இன்றும் பிற்பகல் வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும். அதன்பின் படிப்படியாக மழை குறையும். மன்னார் வளைகுடா அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் காற்று வேகம் அதிகரித்து உள்ளது. இங்கு மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும். மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications