"இது" மிஸ் ஆக சான்ஸே இல்லை.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த முக்கிய வானிலை அப்டேட்.. இதை முதல்ல படிங்க!
சென்னை: சென்னை மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் உச்சம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இன்று அதிகாலையில் இருந்தே இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.

வெதர்மேன்
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக வெதர்மேன் அப்டேட் வெளியிட்டு இருக்கிறார். அதில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 1) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் முன்ன, பின்ன டைமிங் இருக்கலாம். ஆனால் மிக கனமழைக்கான் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை மிஸ் செய்ய சான்ஸ் ரொம்ப ரொம்ப குறைவு.

ரேடார்
ரேடாரில் உள்ள பேண்டுகள் இரவு நேரம் என்பதால் தீவிரமாக உள்ளன. மழையை மிகவும் பாதுகாப்பாக கொண்டாடுங்கள். அதேபோல் தனது முந்தைய பதவியில் சென்னையில் அக்டோபர் 31ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி மழை பெய்வதற்கான மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. இதில் மாற்றம் இருக்க வாய்ப்பே இல்லை. மிக கனமழை முதல் தீவிர கனமழை வரை இங்கே பெய்யும்.

சென்னை
சென்னையில் மழை அளவு பல இடங்களில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளது. அதாவது பல இடங்களில் 200 மிமீ வரை மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளார். வட சென்னை, வடமேற்கு சென்னையில்தான் மிக அதிக கனமழை பெய்து வருவதாகவும் அவர் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். நேற்று இரவு அவர் குறிப்பிட்டது போலவே வடசென்னை பகுதிகளில் மிக கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை
சென்னையில் நேற்று இரவு முழுக்க பெய்த மழை தற்போது கொஞ்சம் விட்டுள்ளது. அதிகாலையில் கொஞ்சம் மழை அளவு குறைந்து உள்ளது. ஆனால் 10 மணிக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications