இன்று தமிழ்நாடு வானிலை எப்படி இருக்கும்? எங்கெல்லாம் மழை பெய்யும்.. முழு ரிப்போர்ட் இதோ!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும், எங்கெல்லாம் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இந்த தாழ்வு பகுதி வலிமை அடைந்து வருகிறது.
இருந்தாலும் மேற்கு பள்ளத்தாக்கு காற்று காரணமாக மழை மேகங்கள் தமிழ்நாட்டை நோக்கி வராமல் விலகி சென்று வருகின்றன. இதனால் இந்த வாரம் தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய மழை பெரிதாக தொடங்கவில்லை. இந்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை
இதனால் இன்று குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும். அதேபோல் நாளை குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும்.

காற்று வேகம்
நாளை மறுநாள் குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும். மழையை பொறுத்தவரை இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாளும் இதே இடங்களில் மழை பெய்யும். 22ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 23ம் தேதி இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு பின்பே ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் என்று அளவில் இருக்கும். அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு பள்ளத்தாக்கு காற்று இந்த வடகிழக்கு பருவமழைக்கு எப்போதுமே வில்லன்தான். தற்போது வரப்போக உள்ள மழைக்கும் கூட இது வில்லனாகவே இருந்து வருகிறது.

என்ன சொன்னார்?
நமது மண்ணிற்கு வரும் மழையை அழுத்தி இது வெளியே தள்ளுகிறது. கண்டிப்பாக இந்த மேற்கு பள்ளத்தாக்கு காற்று நமக்கு ஹீரோ அல்ல. வில்லன்தான். தமிழ்நாட்டில் மழையை எதிர்பார்க்கலாம். ஆனால் அந்த மழை பெரிதாக பாதிக்க கூடிய மழையாக இருக்காது. என்ஜாய் செய்ய கூடிய சிறிய அளவிலான மழையாகவே இருக்கும். நாம் நமது இயல்பு வாழ்க்கையை தொடர வேண்டும். மலைவாசஸ்தலங்களில் விடுமுறை நாட்களை கொண்டாடும் மக்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் விடுமுறை நாட்களை மழை பெரிதாகி பாதிக்காது. தீவிர மழை பெய்யாது, என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications