தமிழ் புத்தாண்டு.. 'எல்லாரும் நல்லா இருக்கணும்' அதிகாலையிலேயே கோவில்களில் குவிந்த மக்கள்..சாமி தரிசனம்
சென்னை: தமிழ் புத்தாண்டு தினம் இன்று தமிழத்தில் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்வதற்காக மக்கள் கோவில்களில் குவிந்தனர்.
தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தமிழ்ப் புத்தாண்டு பெரும்பான்மையான தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. சுபகிருது வருடம் முடிந்து இன்று முதல் சோபகிருது ஆண்டு தொடங்க இருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையிலேயே மக்கள் கோவில்களில் குவிந்தனர். குறிப்பாக வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிமாக இருந்ததால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். அறுபடை முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதேபோல் தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிறந்துள்ள சுபகிருது ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என வேண்டி மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சித்திரை புத்தாண்டை ஒட்டி சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பிரபல கற்பக விநாயகர் கோயிலில், மூலவர் தங்க கவசத்துடன் காட்சியளித்தார்.
இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நெல்லையில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்தனர். இதனால், கோவில் வளாகம் முழுவதும் எங்கும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. கடற்கரை பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்து முருக பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications