அரசியலுக்கு வர மாட்டார் ரஜினி.. முன் கூட்டியே கணித்த நமது வாசகர்கள்.. துல்லியமான ஆரூடம்!
சென்னை: ரஜினிகாந்த் திட்டமிட்டபடி வரும் 31-ஆம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவிக்க மாட்டார் என நமது ஒன் இந்தியா வாசகர்கள் ஏற்கெனவே ஒருகருத்துக் கணிப்பில் தெளிவாக சொல்லியிருந்தனர். அதுபோலவே இப்போது நடந்துள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் முத்து திரைப்படத்தில் வரும் பஞ்ச் போல அவர் எப்ப வருவாரு, எப்படி வருவாருனு யாருக்கும் தெரியாது, வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவாரு என்பதை போல் இருந்தது.
இந்த நிலையில் ஒரு வழியாக ஜனவரி மாதம் கட்சியை அறிவிக்க போவதாகவும் அதுகுறித்து டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பதாகவும் ரஜினி தெரிவித்திருந்தார்.

டிசம்பர் 31
இதனால் ரஜினியின் கட்சி என்னவாக இருக்கும் கொடி என்னவாக இருக்கும், ஆட்டோ சின்னமா, பாபா முத்திரையா என பெரிய விவாதமே நடந்தது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்ற போது டிசம்பர் 31 அறிவிப்பு என்னவாகும் என நினைக்கத் தோன்றியது.

தமிழ் ஒன் இந்தியா கருத்து கணிப்பு
இதுகுறித்து நமது ஒன் இந்தியா தமிழ் தளத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வைத்தோம். அதாவது ரஜினி திட்டமிட்டபடி வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்து அறிவிப்பார் என கருதுகிறீர்களா என கேட்கப்பட்டது. இதற்கு ஆம் அறிவிப்பார், இல்லை அறிவிக்க மாட்டார், கருத்து சொல்ல விரும்பலை என்ற 3 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன.

ஆப்ஷன்
இதில் இல்லை அறிவிக்க மாட்டார் என்ற ஆப்ஷனை 45.65 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள். இது போல் ஆம் அறிவிப்பார் எனப்பதை 23.91 சதவீதம் பேரும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்ற ஆப்ஷனை 30.43 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளார்கள்.

முன் கூட்டியே கணித்த வாசகர்கள்
இந்த நிலையில் ரஜினி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும் தன்னுடன் பிரச்சாரத்திற்கு வருவோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் அவர் அரசியலுக்கு வர போவதில்லை என இன்று அறிவித்துள்ளார். அத்துடன் மன்னிப்பும் கேட்டுள்ளார். எனவே நமது ஒன் இந்தியா வாசகர்கள் ரஜினியின் முடிவை முன்கூட்டியே கணித்துவிட்டார்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications