நான் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும் என நினைக்கின்றனர்..விபத்து குறித்து மனம் திறந்த இர்ஃபான்
சென்னை: நான் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும் என்று எண்ணி சிலர் கருத்துக்கள் பதிவிடுகின்றனர் என்று யூடியூபர் இர்ஃபான் கூறியுள்ளார். கார் விபத்து அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தால் நான் உண்மையாகவே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன் என்றும் தனது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் இர்ஃபான். இவர் தனது யூடியூப் சேனலில் பல்வேறு உணவகங்களுக்கு சென்று பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட்டு அது குறித்த கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து வருகிறார். இர்ஃபானுக்கு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர்களுடனும் சாப்பிட்டு அது குறித்து வீடியோவாகவும் வெளியிடுவார்.

கடந்த மாதம் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அது குறித்த வீடியோக்களையும் விருந்து, சீர்வரிசை பற்றியும் வீடியோவாக வெளியிட்டார் இர்ஃபான். அதனை அடுத்து தனது மாமியார் வீட்டிற்கு மறு வீட்டிற்கு சென்ற இவர் கடந்த மாதம் 25ஆம் தேதி அன்று இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் தஞ்சாவூரில் இருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தார். அவரது காரில் உறவினர்களுடன் வந்த போது காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே இவரது கார் மோதி விபத்துக்குள்ளானதில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து புது மண தம்பதியரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதுநாள் வரை எதுவும் கூறாமல் இருந்த இருந்த யூடியூபர் இர்ஃபான் தற்போது அந்த விபத்து குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது வீடியோவில் மறு வீடு விருந்து முடித்துவிட்டு உறவினர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தபோது மறைமலைநகர் அருகே பேரிகேடுகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென அந்த பெண்மணி குறுக்கே வந்ததால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அப்போது காரை ஓட்டிச் சென்ற அவரது மச்சான் விபத்தை தடுக்க முயற்சி செய்த போதிலும் விபத்து ஏற்பட்டுவிட்டது. மேலும் அந்தப் பகுதியில் சிறிதளவு கூட வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்ததால் அந்த விபத்து ஏற்பட்டுவிட்டது.
இருப்பினும் அந்த விபத்தில் ஒரு உயிர் பரிதாபமாக பரிபோனது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அந்த பெண்மணியின் குடும்பத்தாரும் இந்த விபத்தால் மிகுந்த சோகத்தில் அமைந்துள்ளனர் என்பதை உணர முடிகிறது. அவர்களின் குடும்பத்தில் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் எனது வருத்தத்தையும் எனது குடும்பத்தாரின் வருத்தத்தையும் இந்த வீடியோவில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விசயத்தினால் நாங்கள் அனைவருமே உடைந்து போய் விட்டோம்.
இதிலும் எனக்கு திருமணம் முடிந்து பத்து நாட்களுக்குள்ளேயே இந்த விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை என்னாலும் எனது குடும்பத்தினராலும் ஜீரணிக்க முடியவில்லை. இது பற்றி நினைத்தாலே என் மனதை உலுக்கச் செய்கிறது. இதிலிருந்து வெளியே வருவதற்கு நானும் எனது குடும்பத்தாரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் இந்த விபத்து சம்பவம் குறித்து சில ஊடகங்கள் எதை எதையோ கூறுகின்றனர். அதனைப் பார்ப்பதற்கே மிகவும் அபத்தமாக உள்ளது. தற்போது இந்த விபத்து சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து சம்பவத்தில் எனது வாகனத்திற்கு தொடர்புள்ளது என்பதால் அந்த வாகனத்திற்கான இன்சூரன்ஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நீதிமன்றம் மூலம் இன்சூரன்ஸ் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அவை அனைத்தும் முடிந்த பின்பு தனிப்பட்ட முறையில் என் சார்பில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உலகமானது ஆபத்து உள்ளவர்களுக்கு பாவம் பார்க்கும் உலகம் கிடையாது, தற்போது இந்த உலகம் இரக்கமற்ற உலகமாக மாறிவிட்டது. எனக்கு இது போன்று எப்போது நடக்கும் என சிலர் காத்திருந்து வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதை நான் ஒரு குற்றச்சாட்டாக வைக்கிறேன் என யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம். நான் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும் என்று எண்ணி சிலர் கருத்துக்கள் பதிவிடுவதோ வீடியோக்கள் பதிவிடுவதையோ செய்தவர்கள் அனைவருக்கும் நான் இதை சொல்லிக் கொள்கிறேன், இந்த சம்பவத்தால் நான் உண்மையாகவே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்.
இது உங்களுக்கு சந்தோஷத்தை தரும் என நினைக்கிறேன். இந்த விபத்தை எடுத்து அதனை சரி செய்ய என்ன வழிகள் எல்லாம் இருக்கிறதோ அதை அனைத்தையும் முயற்சி செய்து வருகிறேன். மேலும் எனக்கு இந்த துயர நேரத்தில் ஆறுதலாக இருந்த பலருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழல் விரைவில் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என எண்ணி அந்த நாளை எதிர்பார்த்து காத்துள்ளேன் என்பதாக மிகுந்த மன வருத்தத்துடன் இர்ஃபான் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications