சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்!

Google Oneindia Tamil News

சென்னை: சுத்தம்.. இருக்கிறதே இரண்டு இலைதான்.. அதில ஒரு இலையில் முதல்வர், இன்னொரு இலையில் தமிழிசை! இப்படித்தான் அந்த ஆரத்தி தட்டை நீட்டி தமிழிசையை வரவேற்றனர் தொகுதி மக்கள்!

தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தினம் ஒரு இடத்திற்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவருக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பினை தந்து வருகிறார்கள்.

தமிழிசையை நேரில் பார்த்ததும் தங்கள் அன்பினை விதவிதமாக பொழிந்து விடுகிறார்கள். தனது ட்வீட்டில் போட்டோக்களோடு இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை தினமும் பதிவிட்டு வருகிறார் தமிழிசை.

EXCLUSIVE: 20 வருடமாக.. பரமக்குடி சண்முகவள்ளி கடையில் மட்டும் கூட்டம் கட்டி ஏறுவது ஏன்? EXCLUSIVE: 20 வருடமாக.. பரமக்குடி சண்முகவள்ளி கடையில் மட்டும் கூட்டம் கட்டி ஏறுவது ஏன்?

வாழ்த்துக்கள்

அதில், நேற்றுகூட ஒரு ட்வீட்டில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி ஆழ்வை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கும்போது மக்களின் வரவேற்பும்... வாழ்த்துக்களும்..." என்று பதிவிட்டு சில போட்டோக்களை போட்டுள்ளார்.

ஆரஞ்சு கலர்

ஆரஞ்சு கலர்

அதில் பெண்கள் தமிழிசையை ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள். இதில் இந்த ஆரத்தி தட்டுதான் ஸ்பெஷல்! ஒரு சில்வர் தட்டு.. அதில் வெள்ளை ஆரஞ்சு கலர் அதாவது காவி கலர் தாமரை உள்ளது. வழக்கம்போல் இரட்டை இலை பச்சை கலரில் உள்ளது. ஆக.. பார்ப்பதற்கு பாஜக-அதிமுக என்று பளிச்சென தெரிகிறது.

தமிழிசை போட்டோ

தமிழிசை போட்டோ

இன்னொரு ஆரத்தி தட்டு அதைவிட ஸ்பெஷல்! அதில் இரண்டு பெரிய இலைகளை வைத்து விட்டார்கள். அதில் ஒரு இலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டோ, இன்னொரு இலையில் தமிழிசையின் போட்டோ உள்ளது.

முதல்வர்

முதல்வர்

அதாவது இரட்டை இலையில் தமிழிசைக்கு ஒரு இலை, எடப்பாடிக்கு ஒரு இலை! கூட்டணியில் மிச்சம் இருப்பவர்கள் நிலை என்ன என தெரியவில்லை! எப்படியோ.. ஆரத்தியை உலக வரலாற்றுக்கே கொண்டு சென்றுவிட்ட பெருமை தூத்துக்குடி தாய்க்குலங்களைத்தான் போய் சேரும்!

English summary
Aazhvai Village People gives warm welcome to Tamilisai Soundarajan campaigned in Thoothukudi Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X