அண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி.. தெருக்கூத்து.. ஸ்டாலின், கேசிஆர் சந்திப்பு குறித்து தமிழிசை நக்கல்
Recommended Video
சென்னை: எல்லாம் துரைமுருகனால் வந்தது.. அன்னைக்கு ஆர்வ கோளாறால், அதீத பாசத்தால், ஸ்டாலின் ஜனாதிபதியாவார் என்று சொல்லிவிட்டார். இன்றைக்கு அதையே பிடித்துகொண்டு வாரி வறுத்தெடுத்து வருவதுடன், தெலுங்கானா முதல்வர் ஸ்டாலினை சந்திப்பது தொடர்பாக ட்வீட் போட்டுள்ளார் தமிழிசை!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மத்தியில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக பினராயி விஜயனையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குமாரசாமியையும் சந்திக்க போகிறார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வந்தது.

அப்போது இது சம்பந்தமாக பேசிய தமிழிசை, "ஸ்டாலினை சந்திக்க நேரம் எதுவும் கேட்கவில்லை என்று சந்திரசேகரராவ் மகளே கூறி உள்ளார். இல்லாத ஒரு அப்பாயிண்மென்ட்டை ஏற்படுத்தி பாஜகவிற்கு சாதகமானது என்று கூறி புறக்கணித்து இருப்பதாக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்.
திண்ணை பிரச்சாரத்திற்குதான் ஸ்டாலின் நாடகம் ஆடுவார் என்று பார்த்தால், அகில இந்திய அளவிலும் நாடகம் ஆட ஆரம்பித்துவிட்டார். ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்றுதான் துரைமுருகன் சொல்லி உள்ளார். அவரை சொந்த கட்சியினரே கிண்டல் செய்யக்கூடிய நிலை உள்ளது" என்று காட்டமாக கூறியிருந்தார்.
அண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி ஸ்டாலின் 25ஆண்டுகளுக்குப்பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு? தேர்தல் முடிவுகளுக்குப்பின் டில்லி குதிரைப்பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு?இங்கே திண்ணை நாடகம்!அடுத்து டில்லியில் கட்சி/அணி மாறிகளின் தெருக்கூத்து??#Namo again sure 2 adore as PM @PMOIndia https://t.co/L3Ejjbl5kR
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 13, 2019
இந்நிலையில்தான், இன்று மாலை 4 மணிக்கு கேஎஸ்ஆர்-ஸ்டாலின் சந்திப்பு நடப்பது உறுதியாகி உள்ளது. இதற்கும் தமிழிசை முதல் ஆளாக வந்து இவர்களின் சந்திப்பை "தெருக்கூத்து" என்று சொல்லி கருத்தை பதிவிட்டு உள்ளார்.
தனது ட்வீட்டில், "திமுக பொருளாளர் துரைமுருகன் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு? தேர்தல் முடிவுகளுக்கு பின் டெல்லி குதிரைப்பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு? இங்கே திண்ணை நாடகம்; அடுத்து டெல்லியில் கட்சி / அணி மாறிகளின் தெருக்கூத்து?" என்று விமர்சித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications