உழைக்க வந்த "தங்கமா".. இல்லை பிழைக்க வந்த "பித்தளையா".. போட்டு தாக்கும் தமிழிசை

தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை: ஸ்டாலின் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்யவார்..! திமுகவில் சேர்ந்ததும் ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த தங்க தமிழ்செல்வன்...

    சென்னை: "நேற்றைய ஹீரோ-இன்று ஜீரோ-நாளை யாரோ? திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா?பிழைக்க வந்த பித்தளையா? என்பதை காலம் உணர்த்தும்" என்று தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்து தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அமமுகவில் விரிசல் அதிகமான பிறகு, தங்க தமிழ்செல்வன் எப்படியும் தாய்க்கழகத்தில்தான் இணைவார் என்று நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டு வந்தது.

    Tamilisai Soundarajan tweet about Thanga Tamil selvan

    இதற்கு அதிமுகவுக்குள்ளேயே நிறைய எதிர்ப்புகள் இருந்தாலும், அதிமுகவை பாஜக இயக்குவதால் அங்கு இணைப்பு என்பது சாத்தியமில்லை என்றும் ஒரு பேச்சு எழுந்தது. ஆனால் எதிர்பார்த்தது போலவே திமுகவில் தங்க தமிழ்செல்வன் இணைந்துவிட்டார். திமுக என்றதுமே, எதிர்பார்த்ததுபோலவே தமிழிசையும் ட்வீட் போட்டு விட்டார்.

    "தங்கதமிழ்செல்வன் திமுகவில் சேர்ந்தார்...செய்தி......நேற்றைய ஹீரோ -இன்று ஜீரோ-நாளை யாரோ?அதிமுகவை பாஜக இயக்குவதால் திமுகவில் சேர்ந்தாராம்? ஸ்டாலின் ஆளுமை அழைத்ததாம்? அதிமுகவில் மீண்டும் சேர அங்கே எதிர்ப்பு அனுமதி கிடைக்கவில்லை என்பதே ஊரறிந்த உண்மை. இதில் எங்கே பாஜக இயக்குகிறது?" என்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    மற்றொரு ட்வீட்டில், "அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல் உற்றுழித்தீர்வார் உறவல்லவர்! ஆட்சி மாற்றம்வரும்! வரும்!என தினமும் ஆரூடம் சொல்லிய திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா? பிழைக்க வந்த பித்தளையா? என்பதை காலம் உணர்த்தும்" என்றும் தெரிவித்துள்ளார்.

    தமிழிசையின் இந்த பதிவுக்கு கீழே,"நீங்ககூடதான் ஆரூடம் சொன்னீங்க, தாமரை மலர்ந்தே தீரும்னு, இங்க கோலத்தில் கூட மலரவைக்க முடியலையே இது ஈயமா பித்தளையா?" என்று ட்வீட்கள் பறக்கின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+