விஜய், திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு.. நயினார் நாகேந்திரன் உள்நோக்கத்துடன் பேசவில்லை.. தமிழிசை கருத்து
சென்னை: திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை என்றுதான் எங்களிடம் சொன்னார் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும், "அவர் பெண்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். பெண்களை இழிவுப்படுத்தும் எண்ணம் அவருக்கு இல்லை" என்றும் தமிழிசை கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று முன் தினம் சேலத்தில் நடந்தது. அப்போது பேசிய விஜய் திமுக, அதிமுகவை விமர்சித்து பேசினார். இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "பாவம் விஜய்க்கு எதுவுமே தெரியாது.. அனுபவமே இல்லாதவர்..

நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள்
முதலில் அவரை வீட்டில் இருந்து வெளியில் வரச் சொல்லுங்கள். திரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும். குடும்பத்தோடு நல் உறவு வைக்க வேண்டும். ஒரு நல்ல தலைமைக்கு அழகு வெளியில் வந்து பேசுவது தான்" என்று கூறியிருந்தார். விஜய், திரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். பாஜக வானதி சீனிவாசனும் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
எந்த உள்நோக்கத்திலும் பேசவில்லை
தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- நயினார் நாகேந்திரன் எப்போதும் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். அவர் எந்த உள்நோக்கத்திலும் பேசியதாக தெரியவில்லை. அவரும் கூட அப்படித்தான் எங்களிடம் சொன்னார். அவர் எந்த விதத்திலையும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்றோ, உள்நோக்கத்துடனோ பெண்களை இழிவுப்படுத்த வேண்டும் என்றோ எண்ணம் உடையவர் அவர் இல்லை.
நான் என்ன சொல்கிறேன் என்றால், ஏற்கனவே பெண்களை வைத்து மிக மிக மோசமாக பேசிக்கொண்டிருக்கும் திமுகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களையே ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற காங்கிரசும் இதைப் பற்றி பேசுகிறார்கள் என்பது தான். எங்களை பொறுத்தவரை பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கின்ற கட்சி. மரியாதை கொடுக்கின்ற தலைவர்.
பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்
பெண் நிர்வாகிகள் நாங்க எல்லாம் இருக்கோம்.. எல்லாத்துக்கும் மரியாதை கொடுப்பவர் தான்.. எதிர்க்குரல் கொடுப்பவர்கள் யார் எப்போ கொடுக்கிறார்கள் என்பது தான் எனது கருத்து. நயினார் நாகேந்திரன் எப்போதும் பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர் தான் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
வானதி சீனிவாசன் கருத்து
முன்னதாக வானதி சீனிவாசன் கூறுகையில், "நயினார் நாகேந்திரன் எப்போதுமே, பொதுவாகவே மிக அமைதியானவர். பண்பாக பேசக் கூடியவர் தான். சட்டசபையில் கூட மிகவும் நாகரிகமாக பேசுவார். எதற்காக திரிஷா பற்றி அவர் அப்படி பேசினார் என்று தெரியவில்லை. அவர் பேசியது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னுடைய கருத்தினை அவரிடம் கூறுவேன்.
அதே சமயம், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு, இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள்" என்று விமர்சனம் செய்து இருந்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications