குமரி அனந்தன் அரசு மருத்துவமனையில் அனுமதி! திடீர் மூச்சுத்திணறல்! பதறிப்போன தமிழிசை சவுந்தரராஜன்!
சென்னை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குமரி அனந்தனுக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை வழங்கி வருகிறது.
இதனிடையே தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்த தகவலால் தமிழிசை சவுந்தரராஜனை பதற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

குமரி அனந்தன்
இலக்கியச் செல்வர் என்றழைக்கப்படும் குமரி அனந்தன் காமராஜரின் சீடராக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர். மேலும், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர், பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம், இலக்கியக் கடல், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மல் என பல சிறப்புகளுக்கு உரியவர் குமரி அனந்தன். இதுமட்டுமல்லாமல் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியவர் குமரி அனந்தன்.

உடல்நலக் குறைவு
இதனிடையே 90 வயதாகும் குமரி அனந்தனுக்கு நேற்றிரவு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். குமரி அனந்தனுக்கு மருத்துவர்கள் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதோடு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும் இது தொடர்பாக மருத்துவர்களிடம் பேசி உடல்நிலை பற்றிய தகவலை கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழிசை சவுந்தரராஜன்
குமரி அனந்தனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றியும் அறிந்த அவரது மகளும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதறிப்போய் மருத்துவர்களிடம் பேசி தந்தையின் உடல்நலம் பற்றி கேட்டறிந்துள்ளார். இதனிடையே குமரி அனந்தனின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து டிஸ்சார்ஜ் பற்றி மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள்.

அரசு மருத்துவமனை
காமராஜரின் சிஷ்யனாக அரசியல் பால பாடம் பயின்றதால் அன்றும் சரி இன்றும் சரி எளிமை விரும்பியாக இருப்பவர் குமரி அனந்தன். இதனால் தான் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications