வருமானத்தை எதிர்பார்க்கும் தங்கதமிழ்ச் செல்வன் தன்மானத்தை பற்றி பேசக் கூடாது.. தமிழிசை நறுக்
Recommended Video
சென்னை: வருமானத்தை எதிர்பார்க்கும் தங்கதமிழ்ச் செல்வன் தன்மானத்தை பற்றி எல்லாம் பேசக் கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி, சென்னை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிள் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழிசை முன்னிலையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜூலை 6-ஆம் தேதி முதல் தீவிர உறுப்பினர் சேர்க்கை பாஜகவில் நடைபெறவுள்ளது. இது முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும். மிஸ்டு கால் மூலமும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்.

மக்கள்
உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற அடிப்படையை பலப்படுத்தி வருகிறோம். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்திருந்தால் அதிக திட்டங்கள் கிடைத்திருக்கும் என்பதை மக்கள் இனி வரும் காலங்களில் உணருவர்.

இந்திய வீரர்கள்
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை செய்பவர்கள் அதை விட்டுவிட்டு மாற்றுத் தொழில் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு ரூ 40 ஆயிரத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்திய வீரர்களின் உடை காவி நிறத்திற்கு மாற்றம் குறித்து கேட்கிறீர்கள்.

தங்கதமிழ்ச் செல்வன்
காவி ஒரு நிறம். மதுரை பாலத்திற்கு காவி நிறம் அடித்தால் கூட அது பாஜக பாலம் என கூறிவிடுவர் போல. யாகம் நடத்தியதால்தான் மழை வந்ததே தவிர போராட்டம் நடத்தியதால் அல்ல. வருமானத்தை எதிர்பார்க்கும் தங்கதமிழ்ச் செல்வன் தன்மானம் குறித்து பேசக் கூடாது.

அறிவாலய வாசல்
ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யாரும் அறிவாலய வாசலில் நிற்க மாட்டார்கள் என்றார். முன்னதாக அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ்ச் செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கு மோதல் முற்றியது. இதையடுத்து எந்த கட்சியில் சேரமாட்டேன் என வழக்கம் போல கூறிய தங்கதமிழ்ச் செல்வன் திமுகவில் இணைந்துவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications