திடீரென டெல்லிக்கு அழைத்த பாஜக தலைமை.. காரணம் என்ன? தமிழிசை செளந்தரராஜன் அளித்த விளக்கம்
சென்னை: தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியான தமிழிசை செளந்தரராஜனை திடீரென டெல்லி பாஜக தலைமை அழைத்திருக்கிறது. இதனால் தமிழிசை செளந்தரராஜனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவரே பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுடனான சந்திப்பு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று ஜேபி நட்டாவை சந்தித்து பரிந்துரை பட்டியலை அளித்திருந்தார்.

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
அதில் நடிகைகள் குஷ்பு, மீனா மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்களின் பெயர்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திடீரென இன்று பாஜகவின் முக்கிய நிர்வாகியான தமிழிசை செளந்தரராஜன் டெல்லிக்கு புறப்பட்டார். இதுகுறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் நட்டாவின் அழைப்பு காரணமாக டெல்லி செல்கிறேன்.
டெல்லி பயணம் ஏன்?
ஜூலை 1ஆம் தேதியன்று பாஜகவின் அந்தமான் நிக்கோபார் தீவின் மாநில தலைவர் தேர்வு நடக்கவுள்ளது. அதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று கருதுகிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்திக்காமல், திமுக நிர்வாகிகளை மட்டும் சந்தித்து வருகிறார். திமுகவினருக்கு பதிலாக போராடி வரும் மருத்துவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்த வேண்டும்.
பாஜக - அதிமுக கூட்டணி
தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்து, ஆளுங்கட்சியான திமுகவுக்கு பயத்தை அளித்திருக்கிறது. ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித்ஷா தெளிவான பேட்டி கொடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் பெரியார் விலை போக மாட்டார் என்பதால், லோக்சபா தேர்தலின் போது கனிமொழி பெரியார் புகைப்படத்தை நீக்கினார்.
விளம்பர ஆட்சி
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்து வருகிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சரே தமிழ்நாட்டில் மருத்துவரை தேடும் நிலை உள்ளது. அமைச்சர்களின் செயல்பாடுகள் மோசமாக இருக்கிறது. தமிழ்நாடு போதைப்பொருளின் தலைநகரமாக உள்ளதாக அமித்ஷாவே விமர்சித்துள்ளார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் இருக்கும் மக்கள் பேரணியில் வந்து தோற்கடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!












Click it and Unblock the Notifications