நாளை மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
சென்னை: துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக சட்டசபை கூட்டம் மீண்டும் நாளை தொடங்குகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலானது. அதையடுத்து 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கலானது. இரு பட்ஜெட்டுகள் மீதும் 24 ஆம் தேதிவரை விவாதம் நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்திருந்தனர். இந்த நிலையில் துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. இது மே 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நீர் வளத் துறை
முதல் நாளான நாளை புதன்கிழமை நீர்வளத் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் பேசுவார்கள். கூட்டத்தின் இறுதியில் அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் பதில் கொடுப்பார்.

அனல் பறக்கும் விவாதங்கள்
அனல் பறக்கும் விவாதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் முதல்வர் ஸ்டாலின் பதில் அளிப்பார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பேசுவார். ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறும்.

110 விதியின் கீழ்
முக்கிய அறிவிப்புகள் இருந்தால் 110 விதியின் கீழ் அவற்றை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த கூட்டம் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதனால் கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றே தெரிகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இனி விவாதங்கள் அனல் பறக்கும். ஏப்ரல் 7ஆம் தேதி மாநகராட்சி நிர்வாகத் துறை மீதான மானியக் கோரிக்கை, ஏப்ரல் 8 ஆம் தேதி கூட்டுறவு மற்றும் உணவு துறை, ஏப்ரல் 11 ஆம் தேதி பள்ளி மற்றும் உயர் கல்வித் துறை, ஏப்ரல் 12 ஆம் தேதி நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள், ஏப்ரல் 13 ஆம் தேதி வேளாண் துறை, ஏப்ரல் 27ஆம் தேதி தொழில் துறை, மே 9 ஆம் தேதி நிதித் துறை ஆகியவற்றின் மீதான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications