குறுகிய காலத்தில்.. முதல்வர் ஸ்டாலின் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளார்.. பாராட்டிய ஆளுநர் ஆர்என் ரவி
சென்னை: மிக குறுகிய காலத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடு முழுக்க பிரபலம் அடைந்துள்ளார், அவர்தான் நாட்டில் அதிக ஆதரவு கொண்ட மாநில முதல்வர் என்ற கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்று ஆளுநர் ஆர். என் ரவி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழக சட்டப்பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான முதம் கூட்டம் இன்று கூடியுள்ளது. 2022 ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆளுநர் உரை தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடக்கத்திலேயே வெளிநடப்பு செய்தன.

ஆளுநர் உரை
இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி தனது சட்டமன்ற உரையில், ஓமிக்ரான் கேஸ்கள் இந்தியா முழுக்க அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் முதல்முறையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மிக குறுகிய காலத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடு முழுக்க பிரபலம் அடைந்துள்ளார். நாட்டில் அதிக ஆதரவு கொண்ட முதல்வர் என்ற கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா பரவலை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் கொரோனா பரவலை அவர் கட்டுப்படுத்தினர். ஜிஎஸ்டி வருவாய் காரணமாக தமிழ்நாட்டிற்கு வருவாய் குறைந்துள்ளது. வாட் மூலம் கிடைத்த அளவிற்கு வருவாய் கிடைக்கவில்லை. தமிழ் மொழிக்கு அரசு மூலம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் பாராட்டு
பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டம் என்பதே அரசின் குறிக்கோளாக உள்ளது. தமிழை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்க்க நடவடிக்கை. கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுகிறது. உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்

ஆளுநர் ஆர்என் ரவி
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்த்த திட்டம். மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. இல்லம் தேடி கல்வி திட்டம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது . தமிழ்நாடு சட்டப்பேரவை மிகப்பெரிய பாரம்பரியங்களை கொண்டது என்று ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications