மிரட்டலாம், உருட்டலாம் என நினைக்காதீர்கள்.. அப்பாவு கண்டிப்பு.. தங்கமணியை ஆப் செய்த செந்தில்பாலாஜி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மின்தடை அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு மின்சாரத்துறை செந்தில் பாலாஜி சட்டசபையில் பதில் அளித்தார்.

தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதங்கள் இதில் நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு மே 10ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த நிலையில் சட்டசபையில் நேற்று மின்சார தேவை மற்றும் தட்டுப்பாடு பற்றிய விவாதம் செய்யப்பட்டது. இதில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.

தங்கமணி கேள்வி

தங்கமணி கேள்வி

சட்டசபையில் கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கோடை வெயில் அதிகமாக இருப்பதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகரித்துள்ளது. தினமும் 10 முறைக்கு மேல் மின்வெட்டு செய்யப்படுகிறது. மின் தட்டுப்பாடு இருந்தால் முன் கூட்டியே அறிவித்து.. ஏதாவது ஒரு நேரத்தை குறிப்பிட்டு மின் தடை செய்தால் கூட நன்றாக இருக்கும். இதன் மூலம் மக்கள், தொழிற்சாலைகள், விவசாயிகள் தயாராக இருக்க முடியும். மின்தடைக்கு ஏற்றபடி அவர்கள் தங்கள் பணிகளை திட்டமிட முடியும்.

மின்தட்டுப்பாடு

மின்தட்டுப்பாடு

விவசாயிகள், விசைத்தறி ஊழியர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதை பற்றி சட்டசபையில் பேசுங்கள் என்று மக்கள் என்னிடம் கூறி வருகிறார்கள். கோடை காலம் என்றால் நிலக்கரி பற்றாக்குறை இருக்கும். எனவே நிலக்கரி கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவும் மின்சாரம் தேவை என்று குறிப்பிட்டார். மற்ற சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும், பாமக ஜிகே மணியும் இதே கோரிக்கையை வைத்தனர்.

அதிமுக உறுப்பினர்கள்

அதிமுக உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் பரவலாக ஆங்காங்கே மின்சாரம் தடைபடுகிறது. மின்தடையால் மக்கள் புழுக்கத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டனர். இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் எழுந்து நின்று மின்தடை பற்றி பேச முயன்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் எழுந்து பேசிய நிலையில் அவர்களை அமரும்படி சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அவர்களிடம் கண்டிப்புடன் பேசிய சபாநாயகர் அப்பாவு, எனக்கு சட்டப்படியும் அவையை நடத்த தெரியும். விதிப்படியும் அவையை நடத்த தெரியும்.

மிரட்ட வேண்டாம்

மிரட்ட வேண்டாம்

உங்கள் கோரிக்கைகளை அனுமதித்து இருக்கிறோம். மக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் உங்கள் கேள்விகளுக்கு அனுமதி அளித்து இருக்கிறேன். என்னை மிரட்டலாம், உருட்டலாம் என்று நினைக்காதீர்கள். இதில் அதிமுகவை மட்டும் நான் கூறவில்லை. எல்லோருக்கும்தான் சொல்கிறேன். மக்கள் விவகாரங்களை நாம் பேச வேண்டும். அதற்குத்தான் இந்த அவை கூடி இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இதையடுத்து தங்கமணி குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓராண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்ற உன்னதமான திட்டத்தை கடந்த ஆண்டு 23/9/2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டம் 1 ஆண்டிற்கு பதிலாக வெறும் 6 மாதங்களில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் நன்றி

விவசாயிகள் நன்றி

கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்து வருகிறது. 2021ம் ஆண்டில் இதே காலத்தில் 14 ஆயிரம் மெகாவாட் வரை மின் தேவை இருந்தது. தற்போது மின் தேவை 17196 மெகாவாட் மின்சாரமாக உயர்ந்துள்ளது. இதை மக்களுக்கு விநியோகம் செய்து இருக்கிறோம். கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் மின் பற்றாக்குறை 2500 மெகாவாட் வரை இருக்கும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 மின் கொள்முதல்

மின் கொள்முதல்

இதையடுத்து மின் தட்டுப்பாட்டை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நடுத்தர கால கொள்முதலாக 400 மெகாவாட் மற்றும் 680 மெகாவாட், மத்திய மின் தொகுப்பில் இருந்து 555 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இது போக குறுகிய கால கொள்முதலாக ஏப்ரல் மாதத்திற்கு 960 மெகாவாட், மே மாதத்திற்கு 925 மெகாவாட், மின் பரிமாற்றம் மூலம் 260 மெகாவாட் மின்சாரம் பெறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்த மின்சாரம்

மொத்த மின்சாரம்

மொத்தமாக ஏப்ரல் மாதத்திற்கு 3047 மெகாவாட், மொத்தமாக மே மாதத்திற்கு 3007 மெகாவாட் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அனல்மின் நிலையம் மூலம் செய்யப்பட்ட மின் உற்பத்தி புதிய உச்சம் தொட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நிலக்கரி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 4 லட்சம் 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி

பராமரிப்பு பணி

விரைவில் அதில் கொள்முதல் செய்யப்படும். இதனால் மின் தேவை பூர்த்தி செய்யப்படும். பராமரிப்பு பணிக்கு மட்டுமே தற்போது மின் வெட்டு ஏற்படுகிறது. அது எப்போதும் தமிழ்நாட்டில் செய்யப்படும் மின் வெட்டுதான். அதையும் முன் கூட்டியே தெரிவித்துதான் ஏற்படுத்துகிறோம். மற்றபடி அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கள் எதுவும் தமிழ்நாட்டில் செய்யப்படவில்லை, என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+