• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மத்திய அரசு திட்டங்களில் தமிழக அரசு ஊழல்!" பாஜக நாராயணன் பகீர்.. திராவிட மாடல் குறித்தும் அட்டாக்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன், திமுக அரசைக் கடுமையாகச் சாடி பேசினார்.

Recommended Video

  மத்திய அரசு திட்டங்களில் தமிழக அரசு ஊழல்! - பாஜக நாராயணன் குற்றச்சாட்டு

  பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மத்திய அரசுத் திட்டங்களில் மாநில அரசு ஊழல் செய்வதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

  “அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?

  திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களின் விடுதலை குறித்தும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.

   பொருளாதாரம் தெரியாத நிதியமைச்சர்

  பொருளாதாரம் தெரியாத நிதியமைச்சர்

  செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன், "பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க முடியாது என்று தமிழக அரசு கூறுவது கண்டனத்திற்குரியது, தமிழக அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை முன்னெடுத்துச் செல்கிறது. பொருளாதாரம் என்பது என்ன என்று தெரியாத நிதியமைச்சர் தமிழக அமைச்சராக உள்ளது அவமானத்திற்கு உரியது. இலங்கை போல் இந்தியாவும் மாறும் என முட்டாள்தனமான கருத்தை மத்திய அரசைக் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்வது இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது.

   பெட்ரோல் விலை

  பெட்ரோல் விலை

  பெட்ரோல் விலையைக் குறைந்தது 10 ரூபாய் குறைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும். அப்படி குறைக்க தவறும் பட்சத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும்.

   எம்ஆர்கே பன்னீர்செல்வம்

  எம்ஆர்கே பன்னீர்செல்வம்

  தமிழக அரசை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற கூற்றுக்கு மாறாகப் பிரதமர் மோடியின் தமிழக வருகை இருக்கும். தமிழக அரசின் பொருளாதாரம் சிறக்கப் பிரதமரின் வருகை வழிவகுக்கும். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மிரட்டும் தொனியில் பேசிய எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் பேச்சு கண்டனத்துக்குரியது, தரமற்று கண்ணிய குறைவாகத் தமிழக பாஜக தலைவரைப் பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை தமிழக அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்,

   பேரறிவாளன் விடுதலை

  பேரறிவாளன் விடுதலை

  முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையில் மிகப் முக்கிய பங்காற்றிய மோசமான குற்றவாளி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்து உள்ளது, மீதமுள்ள 6 விடுவிக்க மத்திய அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாது திமுக தொடர்ந்து பட்டியல் இனத்தவர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது, பிராமணர்களை ஒழிப்பது பட்டியலினத்தவரை அழிப்பது என்ற கொள்கையுடன் திமுக செயல்பட்டு வருகிறது.

   சட்டம் ஒழுங்கு

  சட்டம் ஒழுங்கு


  திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இல்லவே இல்லை. இந்திய நாட்டின் பிரதமரைக் கொன்ற கும்பலைச் சார்ந்த குற்றவாளியை ஆரத்தழுவிக் கட்டி அணைத்து வரவேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை எதிர்பார்ப்பது என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது மத்திய அரசு திட்டங்களில் தமிழக அரசு ஊழல் செய்து வருகிறது, இதனை பாஜக வேடிக்கை பார்க்காது. விரைவில் கடுமையான நடவடிக்கை தமிழக அரசு மீது எடுக்கப்படும்.

   திராவிட மாடல்

  திராவிட மாடல்

  இந்து துரோக திராவிட முன்னேற்றக் கழக அரசு கோவில்களை விட்டு வெளியேற வேண்டும், கோவில்களில் தற்போது தமிழக அரசு அதிக அளவில் ஊழல் செய்து வருகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக பாஜக செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர்கள் தரங்கெட்ட வகையில் தரம் தாழ்ந்து பேசுவது, நிதி நிர்வாகம் இல்லாதது, சிறைச்சாலை மரணங்கள், விவசாயத்தில் பின் தங்கியது என்பதைத் தான் திராவிட மாடலாக திமுக பார்க்கிறது" என்றும் அவர் மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

  English summary
  Tamil Nadu BJP Vice President Narayanan condemns minister MRK Panneerselvam speech: BJP Vice President Narayanan latest press meet about Rajiv gandhi assassination convicts release.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X