சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாச்சு? சாலையில் காத்திருந்த பெண்.. காரை நிறுத்தி விசாரித்த முதல்வர்.. ஒரே கையெழுத்தில் தீர்வு!

Google Oneindia Tamil News

சென்னை: சாலை ஓரத்தில் மனு கொடுப்பதற்காக காத்திருந்த பெண்மணிக்காக காரை நிறுத்தி, அவரின் குறைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்த சம்பவம் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், அவர் எளிதாக மக்கள் மூலம் அணுக கூடியவராக இருக்கிறார். முக்கியமாக தனது கான்வாய்க்காக அதிக அளவில் பாதுகாப்பு வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துவது கிடையாது.

இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

குறைவான வாகனங்களோடு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், எளிமையாக பயணம் மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக பிற மாவட்டங்களுக்கு போகும் போது பெரிய ஏற்பாடுகள் இன்றி எளிமையாக செல்கிறார்.

சென்னை

சென்னை

அதிலும் திமுக பேனர்கள், போஸ்டர்கள், கொடிகள் இல்லாமல், சாலையில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யாமல் முதல்வர் ஸ்டாலின் பயணம் செல்வது நல்ல உதாரணமாக மாறியுள்ளது. இந்த நிலையில்தான் இன்று காலை சாலை ஓரத்தில் காத்திருந்த பெண்மணி ஒருவருக்கு முதல்வர் ஸ்டாலின் உதவி செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

என்ன நடந்தது

திருச்சியில் முதல்வரின் கான்வாய் செல்லும் வழியில் இந்த பெண் காத்திருந்திருக்கிறார். மனு ஒன்றை கொடுப்பதற்காக காத்திருந்திருக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக சாலையின் ஓரத்தில் அவர் மட்டுமே நின்றுள்ளார். இந்த நிலையில், அந்த வழியாக வந்த முதல்வர் ஸ்டாலின், அந்த பெண்ணை பார்த்ததும் உடனே காரை நிறுத்தி, என்ன ஆச்சு என்று விசாரித்துகிறார்.

மனு

மனு

இதையடுத்து அந்த பெண்மணி முதல்வர் ஸ்டாலினிடம் மனுவை நீட்டி இருக்கிறார். இந்த மனுவை படித்த முதல்வர் ஸ்டாலின், உடனே அதில் கையெழுத்து போட்டு, வேகமாக நடவடிக்கை எடுக்கும்படி தனது உதவியாளரிடம் மனுவை கொடுத்துள்ளார். அதோடு அந்த பெண்ணிடம், உங்களின் கோரிக்கைக்கு இன்றே தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.

சிறப்பு

சிறப்பு

மாநில முதல்வர் ஒருவர் மக்களால் இப்படி எளிதாக அணுகும் வகையில் இருப்பது மக்களை பெரிய அளவில் கவர்ந்து உள்ளது. அந்த பெண்மணி முதல்வர் அருகே சென்று மனுவை கொடுத்த போது, யாரும் அந்த பெண்ணை தடுக்கவில்லை. முதல்வரை மிக எளிதாக ஒரு பெண் சந்தித்து மனு அளிக்கும் வகையில் முதல்வர் எளிதாக இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
Tamilnadu CM M K Stalin stops his car for a women and resolved her issue video goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X