சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 அவுட்.. 5 இன்.. தமிழக காங்கிரசில் "கை" வைக்கும் ராகுல்.. மொத்தமாக தூக்க முடிவு? வெலவெலத்த கதர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு காங்கிரசில் முக்கியமான சில நிர்வாகிகளை மாற்றும் திட்டத்தில் டெல்லி மேலிடம் இருப்பதாக கதர் சட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    Congress கட்சி நாடு முழுவதும் போராட்டம் *India

    லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நன்றாகவே செயல்பட்டது. சட்டசபை கூட்டணியில் பெரிய அளவில் இடங்களை கேட்டு பெற முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் நன்றாக போட்டியிட்டு இருந்தது.

    அதே சமயம் கூட்டணி கட்சியான திமுகவிற்கு கே.எஸ்.அழகிரிக்கும் இதில் லேசான உரசல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் வலம் வர தொடங்கி உள்ளன.

    சமீபத்தில் திமுக அரசை இவர் சில இடங்களில் விமர்சிக்கும் வகையில் பேசியதே இந்த விவாதம் எழ காரணமாக அமைந்தது.

    சோனியாவிற்கு அதிகரிக்கும் அழுத்தம்.. டெல்லியில் ஜி 23 தலைவர்கள் அவசர கூட்டம்.. காங்கிரசில் மோதல்! சோனியாவிற்கு அதிகரிக்கும் அழுத்தம்.. டெல்லியில் ஜி 23 தலைவர்கள் அவசர கூட்டம்.. காங்கிரசில் மோதல்!

    மாற்றம்

    மாற்றம்

    இந்த நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெகு விரைவில் மாற்றப்படலாம் என்று பேச்சுக்கள் எழுந்தன. கடந்த சில மாதங்களாகவே இந்த பேச்சு தமிழ்நாடு அரசியலில் உலவி வருகிறது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம். கே எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆக போகிறது. ஆனால் இன்னும் காங்கிரசில் புதிய தமிழ்நாடு தலைவர் நியமிக்கப்படவில்லை. இது டாப் நிர்வாகிகள் பலர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    செயல் தலைவர்

    செயல் தலைவர்

    இந்த நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களை மாற்றியமைக்க டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது. தமிழக காங்கிரசில் தற்போது டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் என 4 செயல்தலைவர்கள் இருக்கின்றனர். இவர்களை மொத்தமாக "தூக்கிவிட்டு", புதிதாக 5 செயல்தலைவர்களை நியமிக்க ராகுல்காந்தி ஆலோசித்துள்ளார். நிர்வாகிகள் மாற்றம் என்பதை அறிந்து வெலவெலத்து போன தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தங்களின் வாரிசுகளை அப்பதவிக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

     கோஷ்டி

    கோஷ்டி

    கோஷ்டி கோஷ்டியாக நிர்வாகிகள் மாறி மாறி இதற்காக நகர்த்தி வருகின்றனர். பொதுவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிறைய கோஷ்டி மோதல் இருக்கும். அந்த கோஷ்டி மோதல் இந்த பதவியை பெறுவதிலும் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் இப்பதவியைக் கைப்பற்ற டெல்லியில் காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், வாரிசுகள், தேர்தலில் இதற்கு முன்பு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டவர்கள் என யாருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என்று கட்சிக்கு உள்ளே கலக்க குரல்கள் கேட்க தொடங்கி உள்ளதாம்.

    புதியவர்கள்

    புதியவர்கள்

    புதியவர்களுக்கும் இதுவரை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதவர்களுக்கும் தான் செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியில் வாய்ப்பு கிடைக்காத கதர் சட்டை நிர்வாகிகள் குரல் எழுப்பி வருகின்றனர். இது குறித்த தங்களின் குரலை காங்கிரஸ் கட்சியின் பல தரப்பினரும் ராகுலிடம் பதிவு செய்து வருகின்றனர். இப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கிறது. அதேபோல் ராகுல் காந்தியும் அமலாக்கத்துறை விசாரணை, போராட்டம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். இந்த பிரச்சனைகள் முடிந்ததும் விரைவில் தமிழ்நாடு காங்கிரசில் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Tamilnadu Congress Committee to see new changes soon: Rahul Gandhi plans to change top brass. தமிழ்நாடு காங்கிரசில் முக்கியமான சில நிர்வாகிகளை மாற்றும் திட்டத்தில் டெல்லி மேலிடம் இருப்பதாக கதர் சட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X