இன்னும் கொஞ்ச நாள்தான்! தமிழ்நாட்டில் தினசரி Covid கேஸ்கள் 80,000 ஐ தாண்டும்- IIS முக்கிய எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் தினசரி கொரோனா வைரஸ் கேஸ்கள் 80 ஆயிரத்தை தாண்டும் என்று ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தினசரி கேஸ்கள் கடந்த 3 நாட்களாக ஒரு லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று இந்தியாவில் 147,814 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 35,516,186 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் 10 ஆயிரத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் வரை தினசரி கேஸ்கள் 1000க்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் திடீரென தினசரி கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது.

இந்தியா ஓமிக்ரான்
இந்த நிலையில் இந்தியாவில் என்னதான் 150 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் வேக்சின் போடப்பட்டு இருந்தாலும் கூட இந்த மாதம் கேஸ்கள் புதிய உச்சம் தொடும் என்று இந்திய அறிவியல் கழகம் நடத்திய கூட்டு ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Indian Institute of Science and Indian Statistical Institute (IISc-ISI) மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் இந்தியாவில் ஜனவரி இறுதியில் 10 லட்சம் கேஸ்கள் வரை பதிவாகும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா கொரோனா
அதாவது தினசரி கேஸ்கள் 10 லட்சம் வரை செல்லும் என்று இந்த ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவா ஆத்ரேயா, ராஜேஷ் சுந்தரேசன் மற்றும் குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் ஆகும் இது. இரண்டாம் அலையின் போதும் இந்தியாவில் இவர்கள் துல்லியமாக கணிப்புகளை வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேக்சின் போடப்பட்டு இருந்தாலும் மக்கள் அதிக அளவில் வெளியே வருவதாலும், ஓமிக்ரான் வேகமாக பரவுவதாலும் கேஸ்கள் பல லட்சத்தை தொடும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியா
அதன்படி அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தினசரி கேஸ்கள் 1,75,000 என்ற அளவை தொடும். ஜனவரி இறுதியில் கர்நாடகாவில் தினசரி கேஸ்கள் 1,20,000 என்ற அளவை தொடும். கேரளாவில் தினசரி கேஸ்கள் ஜனவரி இறுதியில் 1,00,000 என்ற அளவை தொடும். உத்தர பிரதேசத்தில் தினசரி கேஸ்கள் 80 ஆயிரம் என்ற அளவை தொடும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கொரோனா
இந்த ஆய்வுப்படி தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் ஜனவரி மாத இறுதியில் 80 ஆயிரம் என்ற அளவை தொடும். அதாவது இன்னும் இருபது நாட்களில் தமிழ்நாட்டில் தினமும் 80 ஆயிரம் கேஸ்கள் வரை பதிவாகும் என்று Indian Institute of Science and Indian Statistical Institute (IISc-ISI) ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்றபடி ஆந்திர பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 50 ஆயிரம் கேஸ்கள் தினமும் பதிவாகும்.

தமிழ்நாடு ஓமிக்ரான்
பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தினசரி கேஸ்கள் 35 ஆயிரம் என்ற அளவை தொடும். மற்றபடி வடகிழக்கு மாநிலங்களில் தினமும் 10-12 ஆயிரம் கேஸ்கள் வரை பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் குறைவான அளவில் சிக்கிமில் ஜனவரி இறுதியில் தினமும் 1000 கேஸ்கள் வரை பதிவாகும். இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஜனவரி இறுதி, பிப்ரவரி தொடக்கத்தில் கேஸ்கள் உச்சம் தொடும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications