தளர்விற்கு பின்பும் குறையும் கொரோனா.. 115 நாட்களுக்கு பின்.. நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழ்நாடு!
சென்னை: தமிழ்நாட்டில் சரியாக 115 நாட்களுக்கு பின் கொரோனா வைரஸ் கேஸ்கள் 2000க்கும் கீழ் சென்றுள்ளது. தொடர்ந்து கட்டுப்பாட்டு பணிகள், டெஸ்ட்கள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வந்ததால் கொரோனா கேஸ்கள் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று 1971 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் தினசரி கேஸ்கள் 2500க்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், தற்போது தினசரி கேஸ்கள் 2000க்கும் கீழ் சென்றுள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் 100ல் இருந்து 200 வரை வேகமாக சரிந்து வருகிறது. இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தற்போது 27,282 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளன. பல மாதங்களுக்கு பின் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்திற்கும் குறைவாக சென்றுள்ளது. நேற்று தமிழ்நாட்டில் 2,558 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் தினசரி டிஸ்சார்ஜ் 2500க்கும் அதிகமாக இருக்கிறது.

டிஸ்சார்ஜ்
இதனால் தமிழ்நாட்டில் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,76,339 ஆகியுள்ளது. ஒரு பக்கம் ஆக்டிவ் கேஸ்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா மரணங்கள் கடந்த ஒரு வாரமாக 30க்கும் கீழ் பதிவாகி வருகிறது.

கொரோனா மரணம்
அதன்படி நேற்று தமிழ்நாட்டில் 28 பேர் கொரோனா காரணமாக பலியானார்கள். 33,752 பேர் இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக பலியாகி உள்ளனர். சென்னையில் 5க்கும் குறைவான நபர்களே சராசரியாக தினமும் பலியாகி வருகிறார்கள். சென்னையில் நேற்று 3 பேர் மட்டுமே பலியானார்கள். தமிழ்நாட்டில் தினசரி டெஸ்ட்கள் 1.35 லட்சம் என்ற அளவில் செய்யப்பட்டு வருகிறது.

மாற்றம்
தமிழ்நாட்டில் 115 நாட்களுக்கு பின் கொரோனா கேஸ்கள் 2000கும் கீழ் சென்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தமிழ்நாட்டில் 1971 கேஸ்கள் பதிவானது. அதன்பின் சரியாக 115 நாட்கள் கழித்து தமிழ்நாட்டில் மீண்டும் 1971 கேஸ்கள் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த டிபிஆர் சதவிகிதம் 1.5%, சென்னையில் டிபிஆர் 0.6% என்ற அளவிற்கு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் டிபிஆர் சதவிகிதம் மொத்தம் 2%க்கும் கீழ் சென்றுவிட்டது. 200 பேரை சோதனை செய்தால் 3 பேர் மட்டுமே கொரோனா பாசிட்டிவ் என்று வருகிறார்கள்.

குட்நியூஸ்
லாக்டவுன் தளர்வுக்கு பின்பும் கூட கொரோனா கேஸ்கள் தமிழ்நாட்டில் குறைவது ஒருவகையில் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனா வந்து அதன் காரணமாக இம்மியூனிட்டி பெற்றவர்கள், வேக்சின் மூலம் இம்மியூனிட்டு பெற்றவர்கள், மக்களை இடையே இருக்கும் விழிப்புணர்வு காரணமாக தளர்வுக்கு பின்பும் கேஸ்கள் அதிகரிக்காமல் குறைந்து வருகிறது.

கேரளா
கேரளாவில் லேசான தளர்வு விடப்பட்டதும் கேஸ்கள் 15 ஆயிரத்தை தாண்டி சென்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பேருந்து இயக்கம் தொடங்கி பல்வேறு தளர்வுகள் வந்தும் கேஸ்கள் அதிகரிக்கவில்லை. இதனால் ஒருவேளை தமிழ்நாடு கொரோனா பரவலை மொத்தமாக வென்று, வேகமாக மீண்டும் வருகிறதோ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications