நிம்மதி! தமிழ்நாட்டில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.. உயிரிழப்புகளும் இல்லை
சென்னை: கடந்த சில காலமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஒமிக்ரான் கொரோனா காரணமா 3ஆம் அலை ஏற்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் வரை சென்றது.
இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் விரைவில் குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்வு நிலைக்குத் திரும்பினர்.

தினசரி பாதிப்பு
இதையடுத்து பல வாரங்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் கூட வைரஸ் பாதிப்பு சில காலமாகவே கணிசமாக அதிகரித்தது. இருப்பினும், இன்று மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று மாநிலத்தில் 2,671 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து 2,537ஆகப் பதிவாகி உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
34,469 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் பிரிட்டனில் இருந்து ஒருவர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய இரண்டு பேர் என மொத்தம் 2,537 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 35,01,529 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று 18,842ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 18,819ஆக குறைந்து உள்ளது.

உயிரிழப்புகள் இல்லை
அதேபோல இன்று மட்டும் மொத்தம் 2,560 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,44,682ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களைப் போலவே மாநிலத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. இதுவரை தமிழ்நாட்டில் நாம் 38028 பேரை கொரோனாவால் இழந்து உள்ளோம்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வாரியாக பார்க்கும் போது தலைநகர் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரே நாளில் சென்னையில் 804 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 434 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 119 பேருக்கும் திருவள்ளூரில் 151 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதமும் இப்போது 8ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications