தமிழ்நாட்டில் மளமளவென குறையும் தினசரி கொரோனா பாதிப்பு.. உயிரிழப்புகளும் குறைவதால் நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மளமளவெனக் குறைந்து வரும் நிலையில், இன்றைய தினசரி பாதிப்பு 19,280ஆகக் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் காரணமாகக் கடந்த டிச. இறுதி முதலே கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன.

தற்போது கொரோனா 3ஆம் அலை கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், நாளை பிப். 1ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 தினசரி பாதிப்பு

தினசரி பாதிப்பு

தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு தொடர்ந்து வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த ஜன. 28ஆம் தேதி தினசரி பாதிப்பு 26,533ஆக இருந்த நிலையில், இப்போது வெறும் 3 நாட்களில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்குக் கீழாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 4 பேர் உட்பட மொத்தம் 19,280 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 33,45,220 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

அதேபோல மாநிலத்தில் தினசரி உயிரிழப்புகளும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஜன.29இல் தினசரி உயிரிழப்பு 46ஆக இருந்தது. அது நேற்றைய தினம் 38ஆகக் குறைந்த நிலையில், இன்று அது மேலும் குறைந்து 20ஆக உள்ளது. அவர்களில் 7 தனியார் மருத்துவமனைகளிலும் 13 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 37,564 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வருகிறது. பல நாட்களுக்குப் பின்னர் தற்போது ஆக்டிவ் கேஸ்கள் 2 லட்சத்திற்குக் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 2,03,926 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 1,98,130ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 25,056 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,09,526ஆக உயர்ந்துள்ளது.

 குறையும் கொரோனா

குறையும் கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இப்போது அது 16.2ஆக உள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பில் அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 2897 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பல நாட்களுக்குப் பின்னர் தினசரி பாதிப்பு 3ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது. அதேபோல கோவையில் 2456 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+