தாண்டவம் ஆடும் கொரோனா சென்னைக்கு அடுத்த இந்த மாவட்டம் மோசம்.. 80 ஆயிரத்தை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 10,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்த கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைக் கடந்தது.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளும் இரவு ஊரடங்கும் இன்று அமலுக்கு வருகிறது. இதனால் வரும் நாட்களில் கொரோனா பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு
இந்நிலையில், இன்றைய தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தைத் தமிழக சுகாதார துறை தற்போது அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 1,01,329 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 57 பேர் உட்பட 10,986 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 10,13,378 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு
அதேபோல கொரோனா உயிரிழப்பும் மாநிலத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மாநிலத்தில் 48 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா காரணமாகப் பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13,205ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 17 பேரும் செங்கல்பட்டு மற்றும் கடலூரில் தலா மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் நேற்று 75,116ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 79,804ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து 6250 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 9,20,369 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா
தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 3,711 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்துள்ளது. செங்கல்பட்டில் 1029 பேருக்கும், கோவையில் 686 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications