'நிம்மதி'.. மின்னல் வேகத்தில் குறையும் கொரோனா..1100க்கு கீழ் சென்ற தினசரி வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1090 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து 1க்கு கீழாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்திருந்தது. அதேபோல தினசரி உயிரிழப்பும் உச்சம் தொட்டது.
இதையடுத்து நிலைமை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்றும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்துள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட 1090 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் ஒட்டு மொத்தம் 26,97,418 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கடந்த சில நாட்களாகவே 0.9% ஆகவே தொடர்கிறது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 1.7%ஆகவும் செங்கல்ப்டடு மாவட்டத்தில் 1.5%ஆகவும் உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இன்று சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 15 உயிரிழந்துள்ளனர். அவர்களில் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அதிகபட்சமாக்கத் தஞ்சையில் 3 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 36,048 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 12,791 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 12,540 ஆக மேலும் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,326 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 26,48,830 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான பாதிப்பில் இன்று சென்னையில் தான் அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 141 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 93 பேருக்கும், ஈரோட்டில் 67 பேருக்கும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications