சூப்பர்..! தமிழ்நாட்டில் 50ஆவது நாளாக குறையும் கொரோனா.. 3000 கீழ் சென்ற தினசரி வைரஸ் பாதிப்பு
சென்னை:தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 50ஆவது நாளாகக் குறைந்துள்ள நிலையில், இன்று மாநிலத்தில் 2913 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது.
இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி இன்றும் 50ஆவது நாளாகத் தமிழ்நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இன்று மாநிலத்தில் மொத்தம் 1.50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 5 பேர் உட்பட 2,913 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகளும் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் 49 பேர் மட்டுமே கொரோனாவால் பலியாகியுள்ளனர். அவர்களில் 43 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். மேலும், இன்று உயிரிழந்தவர்களில் 9 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள், 10 பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள். ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் இதுவரை 33,371 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனாவால் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 32,767ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 3,321 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் இதுவரை 24,49,873 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
இன்று கோவை மாவட்டத்தில் 338 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது கோவையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகம். அதேபோல ஈரோட்டில் 215 பேருக்கும், சென்னையில் 174 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு (148), சேலம் (180), தஞ்சை (174), திருப்பூர் (169), திருச்சி (116) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications