கட்டுக்குள் வரும் கொரோனா.. இன்று 1021 பேருக்கு மட்டுமே பாதிப்பு.. ஆக்டிவ் கேஸ்களும் சரிவதால் நிம்மதி
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் 1021 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை கடந்த மே மாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறையக் குறைய ஊரடங்கிலும் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என முதலில் அஞ்சப்பட்டது. இருப்பினும், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வைரஸ் பாகதிப்பு தொடர்ந்து கட்டுக்குள்ளேயே உள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.24 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1021 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,01,614 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தற்போது பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆக உள்ளது. அதிகபட்சமாகத் திருப்பூர், நாமக்கல், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.4%. உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.6%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரைக் கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் என மொத்தம் 14 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கோவையில் 3 பேரும் திருச்சி, நாகை, ஈரோடு மாவட்டங்களில் தல 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,097 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
புதிய கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 11,850ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 11,685ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,172 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,53,832 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 116 பேருக்கும் செங்கல்பட்டில் 85 பேருக்கும் ஈரோட்டில் 76 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவைத் தவிரத் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications