சூப்பர் நியூஸ்..தமிழகத்தில் 25ஆவது நாளாக குறைந்த கொரோனா.. தினசரி பாதிப்பும் 1200க்கும் கீழ் சரிந்தது
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து 25ஆவது நாளாக வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு தினசரி வைரஸ் பாதிப்பு 1200க்கு கீழ் சென்றுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்பட்ட நிலையில், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
இடையில் சில நாட்கள் வைரஸ் பாதிப்பு ஏறினாலும், அதன் பிறகு தொடர்ந்து குறைந்தே வந்தது. கடந்த 25 நாட்களாக மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 26,88,284 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. தற்போது பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆகவே உள்ளது. அதிகபட்சமாகத் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.7%. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.6%ஆகவும் உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கடந்த சில வரங்களாகவே தினசரி கொரேனா உயிரிழப்புகள் 20க்கும் கீழாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அவர்களில் 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் திருச்சியில் 3 பேரும் தஞ்சையில் 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில்

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 14,814ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 14,570ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,423 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,37,802 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 130 பேருக்கும் செங்கல்பட்டில் 87 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவைத் தவிரத் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications