கட்டுக்குள் கொரோனா.. இன்று 1179 பேருக்கு மட்டுமே பாதிப்பு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைவதால் நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து 26ஆவது நாளாக கொரோனா குறைந்து வருகிறது. இன்று மாநிலத்தில் 1179 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறையக் குறைய ஊரடங்கிலும் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்பட்ட நிலையில், அதற்கு மாறாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது. இடையில் சில நாட்கள் வைரஸ் பாதிப்பு ஏறினாலும், அதன் பிறகு தொடர்ந்து குறைந்தே வந்தது.

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்றும் 26ஆவது நாளாகத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.24 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1179 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 26,89,463 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தற்போது பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆக உள்ளது. அதிகபட்சமாகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.8%. உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரைக் கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் என மொத்தம் 16 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 3 பேரும் திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் தல 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 35,928 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

புதிய கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 14,570ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 14,326ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,407 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,39,209 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வரியான கொரோனா பாதிப்பு என்று பார்க்கும் போது தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 127 பேருக்கும் செங்கல்பட்டில் 98 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை தவிரத் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+