லாக் அப் மரணங்கள் எதிரொலி.. இரவு நேரத்தில் ஸ்டேஷனில் வைத்து விசாரணை கூடாது.. தமிழக டிஜிபி உத்தரவு
சென்னை: வழக்கு விசாரணைக்காக கைதாகும் நபர்களிடம் இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவில் கூறியதாவது: தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.
குறிப்பாக காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை, திருவண்ணாமலையில் லாக் அப்பில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட இருவர் மரணமடைந்த நிலையில் டிஜிபி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

மெரினாவில் குதிரை சவாரி
சென்னை மெரினாவில் குதிரை சவாரி தொழில் செய்து வந்தவர் விக்னேஷ். அவரது நண்பர் சுரேஷ். இருவரும் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி ஜி5 போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

விக்னேஷ்
இந் நிலையில் அங்கு விக்னேஷிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து சென்றனர். அங்கு விக்னேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நாடித் துடிப்பு குறைவாக இருப்பதாக கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர். அப்போது அங்கு செல்லும் வழியில் விக்னேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

புகார்
இந்த சம்பவத்தில் விக்னேஷின் தாய் பரபரப்பு புகாரை அளித்திருந்தார். இதனால் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அது போல் திருவண்ணாமலையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த இளையான்குன்னியை அடுத்த தட்டரணை பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (48). இவரை கடந்த 26ஆம் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீஸார் சாராயம் விற்பனை தொடர்பாக கைது செய்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்த தங்கமணி திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மதுவிலக்கு டிஎஸ்பி உள்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications