தமிழகத்தில் சொந்த தொகுதிகளிலேயே தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்.. ஜெயக்குமார் முதல் பூங்கோதை வரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எம்ஆர் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், பாண்டியராஜன் எனப் பலரும் முக்கிய தலைவர்களும் தங்கள் சொந்த தொகுதிகளிலேயே தோல்வியடைந்துள்ளனர்.

Recommended Video

    #TNElectionResults2021 சென்னை: கபடி விளையாடி, படகில் போய்.. எதுவும் எடுபடலையே... அமைச்சர் ஜெயக்குமார் படுதோல்வி!

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது.

    குறிப்பாக திமுக மட்டும் 125 இடங்களில் வென்றுள்ளது. 1996ஆம் ஆண்டுக்குப் பின், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

    பல ஷாக் முடிவுகள்

    பல ஷாக் முடிவுகள்

    இருப்பினும், வழக்கம் போலவே தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வாக்காளர்கள் இந்தத் தேர்தலிலும் பல ஷாக் முடிவுகளைக் கொடுத்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல வேட்பாளர்கள் அவர்களின் சொந்த தொகுதிகளிலேயே தோல்வியடைந்துள்ளனர். கரூர் தொகுதியில் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் திமுகவின் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது இருப்பினும், இதில் செந்தில் பாலாஜி வெற்றிவாகை சூடினார்.

    கமல் - வானதி ஸ்ரீனிவாசன் - மயூரா ஜெயக்குமார்

    கமல் - வானதி ஸ்ரீனிவாசன் - மயூரா ஜெயக்குமார்

    அதேபோல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர தொகுதிகளில் மற்றொன்று கமல் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி. இங்கு வானதி ஸ்ரீநிவாசன் கமல், மயூரா ஜெயக்குமார் ஆகியுருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும், பாஜகவின் மாநில மகளிர் அணித் தலைவி வானதி ஸ்ரீனிவாசன் 1540 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசனை வீழ்த்தினார். காங்கிரஸ் கட்சி இதில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

    அதிமுக முக்கிய வேட்பாளர்கள்

    கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் முக்கிய அமைச்சர்களாக வலம்வந்த பலரும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தனர். ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயக்குமார் திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தியிடம் தோல்வியடைந்தார். அதேபோல ஆவடி தொகுதியில் போட்டியிட்ட பாண்டியராஜன் திமுக வேட்பாளர் நாசரிடம் வீழ்ந்தார். அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம் விழுப்புரத்திலும், கே சி வீரமணி ஜோலார்பேட்டையிலும் எம்.சி.சம்பத் கடலூர் தொகுதிகளிலும் தோல்வியடைந்தனர்.

    திமுக நட்சத்திர வேட்பாளர்கள்

    திமுக நட்சத்திர வேட்பாளர்கள்

    திமுக சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் சிலரும் தோல்வியடைந்தனர். ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளர் பூங்கோதை மற்றும் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் பூங்கோதையை தோற்கடித்து அதிர்ச்சி அளித்தார் மனோஜ் பாண்டியன். அதேபோல தொடர்ந்து 13-வது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+