தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு.. உடனே வெளிமாநிலத்தில் இருந்து கிளம்பி வர வேண்டாம்.. இதை கொஞ்சம் படிங்க!
சென்னை: தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இ - பாஸ் முறையில் பெரிய தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமான சில மாற்றங்கள் உடன் இந்த தளர்வு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக இ பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட இ பாஸ் முறை காரணமாக, பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் போனது.
இதனால் இ பாஸ் முறையில் தளர்வுகளை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று தமிழக மக்கள் தொடர்ந்து இ பாஸ் தளர்வு குறித்து கோரிக்கை வைத்து வந்தனர்.

என்ன கோரிக்கை
இந்த நிலையில் மக்களின் தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இ - பாஸ் முறையில் பெரிய தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமான சில மாற்றங்கள் உடன் இந்த தளர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டம் செல்லலாம்.

இனி தடை இல்லை
தமிழகத்திற்கு உள்ளே இனி பயணிக்க யாருக்கும் தடை இல்லை. ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வர தொடர்ந்து இ பாஸ் முறை அமலில் இருக்கும். அதாவது கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வர வேண்டும் என்றால் எப்போதும் இ பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். முறையான இ பாஸ் கிடைத்த பின்பே எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படும்.

எப்போதும் போல
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த பாஸ் விண்ணப்பித்த உடன் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இ பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது .

எப்படி விண்ணப்பிப்பது
இ பாஸ் விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும். கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ பாஸ் வழங்கப்படும்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications