தமிழகத்தில் எத்தனை கொரோனா படுக்கைகள் காலியாக உள்ளன? தெரிந்துகொள்ள உதவும் அட்டகாசமான இணையதளம்
சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு காலியாகவுள்ளது என்பதை அறிந்து கொள்ள தமிழக அரசு இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 13,776 பேருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

அதேபோல மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 95 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
பெரும்பாலான கொரோனா நோயாளிகள் வீடுகளிலேயே தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள், மூச்சு திணறல் பிரச்னை உள்ளவர்களை மட்டுமே மருத்துவமனைகளுக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா நோயாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கைகள் காலியாகவுள்ள என்பதை அறிந்து கொள்ள தமிழக அரசு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தளத்தில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், ஐசியு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் எவ்வளவு காலியாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள https://stopcorona.tn.gov.in/beds.php


Click it and Unblock the Notifications
